Published : 27 Aug 2014 11:48 AM
Last Updated : 27 Aug 2014 11:48 AM

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்: கர்நாடகத்தை தமிழ்நாடு பின்பற்றுமா

விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலைகளை செய்வது குறித்து கர்நாடகாவில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியமும் இதேபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகை யிலான விநாயகர் சிலைகளை சிலர் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்படும் இந்த சிலைகளுக்கு வேதிப்பொருட்கள் அடங்கிய வண்ணங்களையும் பூசி வருகிறார்கள். இந்த சிலைகள் நீரில் கரையாமல், மண்ணிலும் மக்காமல் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. அத்துடன் இதன் வண்ணங்கள் நீரில் கரைந்து நீர் நிலைகளையும் பாதிக்கிறது.

இதைத் தொடர்ந்து சிலை களை களிமண்ணால் செய்து அதை நெருப்பில் சுடாமல் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும், சிலைகளுக்கு வேதிப் பொருள் அடங்கிய வண்ணங் களைத் தீட்டக்கூடாது என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி வருகி றது. அதே நேரத்தில் சுற்றுச் சூழலுக்கு இணக்கமான விநாய கர் சிலைகளை எவ்வாறு உரு வாக்குவது என்பது குறித்து எந்த பயிற்சியையும் அது வழங்காமல் இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒரு மாதம் முன்ன தாக அங்குள்ள மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலை களை செய்வது குறித்த விழிப்புணர்வை பொதுமக்க ளுக்கு ஏற்படுத்தி வருகிறது. அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு பயிலரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த பயிலரங்குகளில் களி மண்ணால் விநாயகர் சிலைகளை செய்வது, அதற்கு மஞ்சள், புற்கள், செம்மண் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை வண்ணங்களை தீட்டு வது குறித்து பயிற்சி அளிக்கப் படுகிறது. இவ்வாறு செய்வதால் அம்மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலை களை வாங்குவோரின் எண் ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத் துவதுடன், பயிலரங்குகளையும் நடத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x