Published : 31 Oct 2018 08:47 AM
Last Updated : 31 Oct 2018 08:47 AM

முருகன், கருப்பசாமியின் தூண்டுதலால் மாணவிகளிடம் தவறாக பேசியதாக நிர்மலாதேவி வாக்குமூலம்

மதுரை காமராசர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரது தூண்டுதலால்தான் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய தாக பேராசிரியை நிர்மலா தேவி சிபிசிஐடி போலீ ஸாரிடம் வாக்குமூலம் அளித் துள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகை யில் பேசியதாக அருப்புக் கோட்டையைச் சேர்ந்த கல் லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப் பட்டார்.

தமிழக ஆளுநர் வரை இந்த விவகாரத்தில் பல்வேறு நபர்களின் பெயர்கள் அடிபட்ட தால், நிர்மலாதேவி வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக் கில் மதுரை காமராசர் பல் கலைக்கழக உதவிப் பேராசிரி யர் முருகன், முனைவர் பட்ட முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீஸாரிடம் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற் போது வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சிபிசிஐடி தரப்பினர் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்தி பட்டி காவியன் நகரைச் சேர்ந்த சரவணபாண்டியன் என்பவரது மனைவி பேராசிரியை நிர்மலா தேவி (46). வெளிநாட்டில் பணி யாற்றி வந்த சரவண பாண்டியன் கடந்த 4 ஆண்டு களுக்கு முன் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் கலைக் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியையாகப் பணி யாற்றி வந்த நிர்மலாதேவி, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்து புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

பேராசிரியர் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தில், அருப்புக்கோட்டை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரின் கவனிப்பு இல்லாததாலும், கணவர் மூலமாகவும் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நிர்மலாதேவி தனக்குச் சாத கமாக பயன்படுத்தி வந் துள்ளார்.

தான் பணியாற்றிய அருப்புக்கோட்டை கல்லூரி யில் இருந்த நிர்வாகப் பிரச்சினையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய தோடு, மதுரை காமராசர் பல் கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சிக்கு சென்ற போது உதவிப் பேராசிரியர் முருகனும், அவர் மூலம் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் அடுத்தடுத்து அறிமுகம் ஆகியுள்ளனர். இதையடுத்து அருப்புக்கோட்டையில் பேரா சிரியை நிர்மலாதேவியின் வீட்டுக்கே சென்ற உதவிப் பேராசிரியர் முருகன், இந்த உறவை பலப்படுத்திக்கொண் டார்.

அதன் பின்னர், கல்லூரி மாணவிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு முரு கனும், கருப்பசாமியும் தொடர்ந்து பலமுறை நிர்மலா தேவியை வற்புறுத்தி உள்ள னர். அவர்களது வற்புறுத்த லால் மாணவிகளிடம் தவறாகப் பேசியதாக பேராசிரியை நிர்மலாதேவி, தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x