Published : 11 Oct 2018 09:54 AM
Last Updated : 11 Oct 2018 09:54 AM

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரங்கள் சேதம்; பதிவுத்துறை ஐஜி விளக்கம் அளிக்க உத்தரவு: மக்களின் சொத்து பாதுகாப்பாக இல்லை என நீதிபதி வேதனை

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவல கங்களில் உள்ள பத்திரங்கள் சேத மடைந்து செல்லரித்துப் போய்விட் டதால் பொதுமக்களின் சொத்து கள் பாதுகாப்பாக இல்லை என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், இதுதொடர்பாக பல்வேறு கேள்வி களை எழுப்பி பதிவுத்துறை ஐஜி வரும் நவ.1 அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பம்மல் சார்-பதிவா ளர் அலுவலகத்தில் பதிவு செய்யப் பட்ட பத்திரத்தை வழங்கக்கோரி பூபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, சார்-பதி வாளர் அலுவலகங்களில் பதியப் பட்ட பழைய பத்திரங்கள் பாதுகாப் பின்றி செல்லரித்துப் போய்விட்ட தால் அவற்றிற்குப் பதிலாக புதிய பத்திரங்கள் பதிவுசெய்து பாதுகாக் கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியிருந் தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், வழக்கு தொடர்பாக ஆஜராகி யிருந்த சைதாப்பேட்டை சார்-பதிவாளரிடம் பத்திரங்களின் பாது காப்பு தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப் போது நிலங்கள் தொடர்பான 200-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் மாயமாகி இருப்பதற்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதன்பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘ பத்திரப்பதிவு அலு வலகங்களில் பதியப்படும் பத்திரங் களும், பதிவு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களும் பத்திரமாக இருந் தால் தான் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆனால் பெரும்பாலான பத்திரங்கள் சேத மடைந்து செல்லரித்துப் போய்விட்ட தால் பொதுமக்களின் சொத்துக்கள் பாதுகாப்பாக இல்லை.

நேரில் ஆஜராக வேண்டும்

அதிகாரிகள் அலட்சியப் போக்கு டன் செயல்படுவதே இதற்கு முக்கிய காரணம். எனவே பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை பாது காக்க என்ன நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது? என்ன நடை முறைகள் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து பத்திரப்பதிவுத் தலைவரான பதிவுத்துறை ஐஜி வரும் நவ.1 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண் டும்.

அதேபோல லஞ்சஒழிப்புத் துறையினர் பத்திரப்பதிவு அலுவல கங்களில் நடத்திய சோதனையை பார்க்கும்போது விசாரணை அனைத்தும் கண்துடைப்பாக உள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் அளவுக்கு அதிகமாக ஊழல் படிந்து இருப்பது வேதனைக்குரியது. இதனால் பதிவுத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கார்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2016 முதல் 2018 வரையிலான காலகட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் இதுதொடர்பாக எழுப் பப்பட்டுள்ள பல்வேறு கேள்வி களுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசா ரணையை தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x