Last Updated : 22 Oct, 2018 11:35 AM

 

Published : 22 Oct 2018 11:35 AM
Last Updated : 22 Oct 2018 11:35 AM

தென்காசியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து: ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

தென்காசியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் தென்காசி பணிமனையில் இருந்து பாவூர் சத்திரம் - ஆலங்குளம் வழியாக அரசு விரைவுப்பேருந்து ஒன் டூ ஒன் இயக்கப்பட்டு வருகிறது. இன்று (திங்கள்கிழமை) அதிகாலை தென்காசியில் இருந்து புறப்பட்ட ஒன் டூ ஒன் விரைவுப்பேருந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தென்காசி புறப்பட்டு சென்றது. காலை 8 மணியளவில் ஆலங்குளம் அருகே வளைவான சாலையில் பஸ் வேகமாக வந்ததால் டிரைவா் கட்டுப்பாட்டை மீறி சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

காலை நேரம் என்பதால் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் தென்காசி அருகே சிவராமபேட்டையை சோ்ந்த ஈஸ்வரன் (83) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். பஸ்சில் இருந்த பயணிகள் அருள் சிகாமணி (41), அருணாசலம் (50), கல்லூரி மாணவர் பழனிவேல் (17), தாக்தீன் (41), செல்வி (11), இரண்டரை வயது குழந்தை பவித்ரா உள்பட 30 போ் படுகாயம் அடைந்தனா்.

காயம் அடைந்தவா்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம அனுப்பி வைக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக 10-க்கும் மேற்பட்டோர் நெல்லை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆலங்குளம் தென்காசி சாலையில் நடந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x