

திண்டுக்கல் அருகே பிளஸ் டூ முடித்த மாணவி, உடன் படித்த மாணவர்கள் கேலி செய்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மாணவர்கள் 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் நல்லம்மநாயக்கன் பட்டி அருகே ரண்டலப்பாறையைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகள் ஜெஸிந்தா (18). இவர் ப்ளஸ் டூ படித்துவிட்டு செவிலியர் படிப் புக்கு விண்ணப்பித்துள்ளார். வியாழக்கிழமை ஜெஸிந்தா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த உடன் படித்த மாணவர் மத்தியாஸ் (18), கமலி (18), சுஜித் (18), செல்வா (18), பிரிசில்லா மேரி (21). முகிலன் (18) ஆகியோர்தான் காரணம் என 6 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். மத்தியாஸ் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், மற்றவர்கள் தன்னை கேலி, கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐ. வனிதா மற்றும் போலீஸார், மாணவியின் சடலத்தைக் கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
2 பேர் கவுரவக் கொலையா?
திண்டுக்கல் அருகே 2 பேர் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துசாமி, எஸ்.பி. யிடம் புகார் செய்துள்ளார்.
அவர் கூறும்போது, நத்தம் அருகே ராமராஜபுரத்தில், வெவ் வெறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் உறவினர் கள் புகார் அளித்ததால் சாணார்பட்டி போலீஸார் அத்தம்பதியை பிரித்து வைத்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததற்காக அந்த பெண்ணை கவுரவக் கொலை செய்தனர். இந்தக் கொலையை பார்த்த பக்கத்து வீட்டு பெண்ணையும் கொலை செய்துள்ளனர். உண் மையை வெளியே கொண்டு வர விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.