Published : 07 Oct 2018 02:17 AM
Last Updated : 07 Oct 2018 02:17 AM

கீழடியில் அகழாய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வறிக்கை தயாரிக்க திடீர் தடை: மத்திய தொல்லியல் துறை நடவடிக்கையால் வெடித்த சர்ச்சை

சுப. ஜனநாயக செல்வம்

சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா 2015, 2016-ம் ஆண்டுகளில் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டார். இந்நிலையில், அதில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரிக்க மத்திய தொல்லியல் துறை திடீர் தடை விதித்துள்ளது சர்ச்சையை உருவாக்கி  உள்ளது.

கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்ட ஆய்வுமூலம் தமிழகத்தில் சங்ககாலநகரம் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.  மேலும்  5,800 தொல்லியல்  பொருட்கள் கிடைத்தன. இதில்இரண்டு பொருட்களை அமெரிக்காவில் உள்ள கார்பன் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி பரிசோதித்ததில் அந்தப் பொருட்கள்  சுமார் 2500 ஆண்டுகள்  பழமையானது  என  உறுதிப்படுத்தப்பட்டது.இதன் மூலம்  பழங்கால தமிழர்கள்   நகர  நாகரிகங்களுடன் வாழ்ந்தசான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன.இந்நிலையில், 3-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளவிருந்த கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணா திடீரென அசாம் மாநிலத்துக்கு  இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால்,  கீழடி அகழாய்வை மத்திய அரசு முடக்குவதாக  சர்ச்சை ஏற்பட்டது.  பின்னர்,ராமன் மேற்கொண்ட ஆய்விலும் 7  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.

திடீர் தடை

இதனிடையே, அமர்நாத் ராமகிருஷ்ணா அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,800 பொருட்கள்பெங்களூருவிலும், சென்னையிலும் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அதன் ஆய்வறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு மத்திய தொல்லியல் துறை திடீர்தடை விதித்துள்ளது.  அவருக்குப்பதிலாக அதே பிரிவின் கண்காணிப்பாளரான ஆந்திராவைச் சேர்ந்த லெட்சுமி  என்பவரை ஆய்வறிக்கை தயாரிக்க உத்தர

விட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவரும், எழுத்தாளருமான  சு.வெங்கடேசன் கூறியதாவது:

கீழடியில் நடந்த ஆய்வு  சங்க காலத்தில் தமிழகத்தில் செழிப்புற்ற நகர நாகரிகம் இருந்ததை உறுதிப்படுத்தியது.  இதன் காலம் கி.மு. 2-ம் நூற்றாண்டு என்பதும் நிரூபணமானது. ஆனால், வேத நாகரிகமே இந்தியாவின் பூர்வ நாகரிகம் என்று நிரூபிக்க முயலும்  சிலருக்கு கீழடி ஆய்வையும், அதன்கண்டுபிடிப்புகளையும் ஏற்க முடியவில்லை. எனவே  அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு தடை விதித்துள்ளனர் என்றார்.

இதுதொடர்பாக, தொல்லியல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிஒருவர் கூறியதாவது:  மத்திய அரசின் தொல்லியல்துறையின் செயல்பாட்டில் உள்நோக்கம் உள்ளது. தொன்மையான நகர,நாகரிகத்துக்குச்  சொந்தக்காரர்கள்தமிழர்கள் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் வாய்ப்பை மத்திய அரசு தடுப்பதுபோல உள்ளது என்றார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடியின்ஆய்வில் அறியப்பட்டுள்ள உண்மைகள் வெளிவந்தால், இந்தியவரலாற்றின் திசையே மாறிப் போகும் என மத்திய அரசு அஞ்சு

வதால்தான் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டுகிறேன் என்று தெவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x