Published : 16 Oct 2018 12:57 PM
Last Updated : 16 Oct 2018 12:57 PM

திமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு

திமுகவிலிருந்து டி.கே.எஸ் இளங்கோவன் செய்தித்தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இரண்டுமுறை கண்டிக்கப்பட்டவர் மீது .தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

திமுகவில் நீண்டகால அனுபவம் உள்ளவர். கட்சியின் நிலைபாடுகளை மக்கள் முன் கொண்டுச்சென்றவர். திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பமான தலைவர்களில் ஒருவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

தற்போது அவர் தலைமையை கேட்காமல் சில தகவல்களை வெளியில் கருத்தாக கூறியதால் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பொதுச்செயலாளர் அன்பழக்ன் அறிவிப்பில் காரணம் எதுவும் குறிப்பிடாமல் பொதுவாக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் மூத்த தலைவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதன்முறை.

தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக கருணாநிதி காலத்திலிருந்து நீண்ட காலமாக செயல்பட்டுவரும் அவர், திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் திமுகவில் உள்ள சிலரிடம் கேட்டபோது டி.கே.எஸ் இளங்கோவன் இவ்வாறு பேசுவதும் அதனால் கண்டிக்கப்படுவதும் இது முதன் முறையல்ல, இதற்கு முன்னரே இரண்டு முறை திமுக தலைவர் கருணாநிதியால் பகீரங்கமாக கண்டிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு திமுக கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரும் நிலையிலிருந்தபோது திமுக 170 இடங்களில் போட்டியிடும் என கூறியது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது நடவடிக்கை வரலாம் என்கிற நிலையில் தனது பேச்சுக்கு அவர் திமுக தலைமையிடம் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்ததார். அது கட்சி கருத்தல்ல என அறிவிக்க நேர்ந்தது.

இதேபோன்று மற்றொரு சந்தர்ப்பத்திலும் அவரது கருத்து சர்ச்சைக்குள்ளானது. தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா கூறியதும், அதில் அதிமுகவை அழைக்கமாட்டோம் என கூறியதால் அவர்மீது நடவடிக்கை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x