Published : 05 Oct 2018 08:10 AM
Last Updated : 05 Oct 2018 08:10 AM

கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற  4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது: கொட்டும் மழையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் 

ஊதிய ஒப்பந்த ஷரத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த ஷரத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோட்டையை நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக 10 தொழிற் சங்கங்கள் அறிவித்திருந்தன. இதற்கிடையே, மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் போக்குவரத்து செயலாளர் டேவிதாருடன் தொழிற் சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல் வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து ஏற்கெனவே அறிவித்தப்படி, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் உட்பட 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லவன் இல்லம் அருகே நேற்று காலை முதலே குவியத் தொடங்கினர்.

போக்குவரத்து தொழிலாளர் களின் போராட்டத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பல்லவன் சாலை யில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

பல்லவன் சாலையில் திரண்டி ருந்த போக்குவரத்து தொழிலாளர் கள் மத்தியில், தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், ஏஐடியுசி ஜெ.லட்சுமணன் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.

இதையடுத்து, கோட்டையை நோக்கி பேரணிக்கு செல்ல முயன்ற போது, போலீஸார் அவர்களை தடுத்தனர். பின்னர் அவர்களை கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்குக்கு அழைத்து சென்ற னர். மொத்தம் 4,100 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரி வித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் கூறும்போது, “போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யுள்ளோம். கடந்த 10 மாதங்களாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்த பணபலன்களையும் வழங்க வில்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி, தொழிலாளர்களிடம் பிடித்த செய்த பணத்தை அவர்களது கணக்கில் சேர்க்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தில் செய்துள்ள ஷரத்துகளை எதையும் மேற் கொள்ளவில்லை. தொழிலாளர் களை பழிவாங்கும் நடவடிக்கை தொடர்கிறது, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை யெல்லாம் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தோம். ஆனால், எங் களது கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை. இனியும் அரசு நடவ டிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தீவிரமான போராட்டத்தை அறிவிப்போம்’’ என்றார்.

சிஐடியு மாநில தலைவர் சவுந் தரராஜன் கூறும்போது, ‘‘பேச்சு வார்த்தையில் அரசு ஏற்றுக் கொண்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மேலும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய் யும் பணத்தை நிர்வாகம் தொடர்ந்து எடுத்து செலவிடுகிறது. அறிவித்த பஞ்சப்படியைக்கூட இன்னும் வழங்கவில்லை. அரசு போக்குவரத்து கழகங்களில் வரவுக் கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்கவும் வலி யுறுத்துகிறோம்’’ என்றார்.

நவ. 1-ல் வேலைநிறுத்தம்?

இதற்கிடையே, அடுத்தகட்ட போராட்டம் குறித்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் நிர்வாகி கள் ஆலோசனை நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். நவம்பர் 1 அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு நாளில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கலாம் என தொழிற்சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x