Published : 26 Oct 2018 14:55 pm

Updated : 26 Oct 2018 15:11 pm

 

Published : 26 Oct 2018 02:55 PM
Last Updated : 26 Oct 2018 03:11 PM

மேல்முறையீடு, இடைத்தேர்தலிலும் போட்டி: தங்கத்தமிழ் செல்வன் பேட்டி

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இடைத்தேர்தல் வந்தாலும் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தலைமையில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி இது குறித்து ஆலோசித்தோம். ஆலோசனையில் சட்டப்பேரவைத்தலைவர் செய்தது தவறு என்பதை உலகுக்கு உணர்த்த இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.

அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்களா?

அனைவரும் சந்தோஷமாக இதை ஏற்றுக்கொண்டோம், காரணம், சட்டப்பேரவைத்தலைவர் தனபால் ஒவ்வொருமுறையும் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துவருகிறார். நாங்கள் 18 பேரும் டிடிவி தினகரனுடன் இருந்த ஒரே காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

ஓட்டு மாற்றிப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேர்மீது இதுவரை நடவடிக்கை இல்லை. இதை உலகத்துக்கு தெரியபடுத்தவோம், நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்போம். மீண்டும் சட்டமன்ற உறுப்பினாராக வருவோம்.

தகுதியிழப்பில் மீண்டும் போட்டியிட முடியாது என்கிறார்களே?

அப்படி எல்லாம் இல்லை. இன்று தெளிவாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட தடையில்லை, 18 பேரும் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார். ஆகவே 18 பேரும் தேர்தலில் போட்டியிடுவோம். மக்களை சந்தித்து வெற்றிபெறுவோம்.

மேல்முறையீடு காரணம் என்ன?

அதாவது எங்களுக்கு அளித்த தீர்ப்பில் நிறைய குறைபாடுகள் உள்ளதாக வழக்கறிஞர் கூறுகிறார். இது எடியூரப்பா வழக்கில் தலைமை நீதிபதி, இன்னொரு நீதிபதி. அங்கேயும் மூன்றாவது ஜட்ஜ், இங்கேயும் மூன்றாவது ஜட்ஜ். இன்னொரு ஜட்ஜ் சுந்தர் சொன்ன தீர்ப்புத்தான் எங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தில் வரும் என்பது எங்கள் நம்பிக்கை.

ஆகவே 30 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள் மேல் முறையீட்டிற்கு செல்வோம்.

மேல் முறையீடு செய்ய செய்யவில்லை என்று சொன்னார்களே?

மேல் முறையீடு போகமாட்டோம் என்று சொன்னது உண்மை. எங்களுக்கு எதற்காக இந்த முடிவு என்றால் எதற்கெடுத்தாலும் இந்த அரசு அதிகாரத்தை வைத்து எல்லாவற்றுக்கும் தண்டனை கொடுப்பது போன்று வருகிறார்கள்.

நாங்க வேட்மனுத்தாக்கல் செய்யும்போதுகூட எங்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புண்டு. இதெல்லாம் சரி என்று சொல்லத்தான் நாங்கள் மேல்முறையீடு செய்கிறோம். மேல்முறையீடு செய்யும்போதே இடைத்தேர்தல் வைத்தால் 18 பேர் தேர்தலில் போட்டியிடுவோம்.

மேல் முறையீடு செய்தாலே இடைத்தேர்தல் நடக்காதே?

அது நடக்கும் நடக்காமல் போகும் அப்புறம் பார்த்துக்கலாம். நடத்தினால் நிச்சயம் போட்டியிட்டு 18 பேரும் வெற்றிபெறுவோம்.

இது ஏதோ பின்வாங்கும் நடவடிக்கைபோல் உள்ளதே?

நான் சொன்னதை கவனிக்கணும். சட்டப்பேரவைத்தலைவர் ஒவ்வொரு முறையும் தவறு செய்கிறார். சட்டத்தை தவறாக பயன்படுத்தி பழிவாங்குகிறார். அவர் செய்வது தவறு என சுட்டிக்காட்டத்தான் சுப்ரீம் கோர்ட் போகிறோமே தவிர பயந்துபோய் அல்ல.

நீதிமன்றம் சபாநாயகர் செய்தது சரி என்று கூறியுள்ளதே?

எடியூரப்பா வழக்கில் என்ன நடந்தது, அதைச் சொல்லுங்கள்.

பழிவாங்கும் நடவடிக்கைக்காக தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தை அணுகுவீர்களா?

அவர்மீதுதான் ஏற்கெனவே வழக்குப்போட்டுள்ளோமே. மேல் முறையீட்டிலேயே இந்த வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்குங்கள் என்றுத்தான் கேட்கப்போகிறோம்.

ஏற்கெனவே அறிவித்த உண்ணாவிரதம் நடக்குமா?

அறிவித்தப்படி 22 தொகுதிகளிலும் உண்ணாவிரதம் நடக்கும். வரும் 10-ம் தேதி ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறது, இறுதியாக ஆர்.கே.நகரில் முடியும்.

வெற்றிவேல், பார்த்திபன் வரவில்லையே?

வெற்றிவேல் சென்னையில் உள்ளார், பார்த்திபன் உடல்நிலைச் சரியில்லை. எங்களுக்குள் எந்தப்பிரச்சினையும் இல்லை. நீங்கள் எதுவும் எதிர்ப்பார்க்காதீர்கள். வெற்றிவேல் பார்த்திபன் தவிர கூடுதலாக டிடிவி, ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு கூடுதலாக 4 எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author