Published : 30 Oct 2018 09:52 PM
Last Updated : 30 Oct 2018 09:52 PM

5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வியடையும்; பின்னர் தேசிய அளவில் அணிச்சேர்க்கை வரும்: டி.ராஜா பேட்டி

5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வியடையும், அதன்பின்னர் பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய அணிச்சேர்க்கை அமையும் என இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டி:

“இலங்கையில் ராஜபக்‌ஷே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இலங்கை பிரச்சனை கவலை அளிக்கிறது. இலங்கையில் இனப் படுகொலைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணமானவர் ராஜபக்‌ஷே.

அவரது ஆட்சியில் இலங்கை தமிழ் மக்கள் அடைந்த கொடுமைகள் ஏராளம். இந்நிலையில், அவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளது கவலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு அரசு என்ற முறையில் இந்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆர்எஸ்எஸ். அமைப்புதான் இதற்குக் காரணம். மத்திய அரசு என்பது ஆர்எஸ்எஸ் தலைமையால் நடத்தப்படும் அரசாக உள்ளது. பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு மிகப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

ரஃபேல் போர் விமான ஊழல் என்பது ,மோடி ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலாகும். இதைப் பற்றி ஏராளமான ஆதாரங்கள் வெளிவருகின்றன. இந்த ஊழல் குற்றச்சாட்டு மோடி மீது தான் திரும்புகிறது.

அனில் அம்பானி குழுமத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக ,மோடி தனிப்பட்ட முறையில் ரஃபேல் விமான உடன்பாடு தொடர்பாக முடிவு எடுத்துள்ளார். இந்த ஊழல் தொடர்பாக பாராளுமன்ற நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சி.பி.ஐ யின் மீதான மதிப்பு, நம்பகத்தன்மையை மத்திய அரசு சீர்குலைத்துள்ளது. நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளுடன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இந்தத் தேர்தல்கள் மிக முக்கியமானவை. பாராளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் அணிசேர்கை, வெற்றி வாய்ப்புகளில் இத்தேர்தல் தாக்கத்தை உருவாக்கும்.

இந்த மாநிலங்களில் பாஜக படு தோல்வி அடையும். ராஜஸ்தான்,

மத்திய பிரதேசம், சட்டீஸ்கரிலும் பா.ஜ.க அரசுக்கு எதிரான கோப அலை வீசுகிறது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், பக்தர்கள் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ்ஸும். ,பா.ஜ.க வும் கலவரத்தை கேரளாவில் உருவாக்கியுள்ளன.

பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் எதிராக ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது. கேரளாவின் இடது சாரி ஜனநாயக அரசை மிரட்டும் வகையில் அமித்ஷா கேரளாவில் பேசியுள்ளார்.

பா.ஜ.க வும் மத்திய அரசும் மக்கள் பிரச்சனைகளை பேசத் தயாராக இல்லை.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. ராமர் பெயரையும், இந்துக்கள் பெயரையும் அரசியல் ஆதாயத்துக்காக ,மக்களை பிளவு படுத்த பாஜக - ஆர்எஸ்எஸ். கூட்டு செயல் படுகிறது.

பா.ஜ.க ஆட்சி வீழ்த்தப்பட்டு ,மாற்று அரசு உருவாகும்.

தேர்தலுக்குப் பிறகு மாற்று அரசை உருவாகும் சூழல் உருவாகும்.

தமிழகத்தில் ஏன் இரண்டு தொகுதிகளுக்கு இது வரை தேர்தல் நடத்தப்படவில்லை என்பது மர்மமாக உள்ளது.

இடைத் தேர்தல் வந்தால் தமிழக நலன் காக்கும் வகையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x