Published : 28 Oct 2018 08:17 AM
Last Updated : 28 Oct 2018 08:17 AM

தருமபுரி பேருந்து எரிப்பில் 3 மாணவிகள் இறந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அதிமுகவினரை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநர் மறுப்பு: தமிழக அரசின் கோப்புகளையும் திருப்பி அனுப்பினார்

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டணை பெற்று சிறை யில் உள்ள மூவரையும் முன்கூட் டியே விடுவிக்க ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மறுத்ததுடன், கோப்புகளையும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவுக்கு வழக்கு ஒன்றில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை யடுத்து, தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

3 மாணவிகள் உயிரிழப்பு

தருமபுரியில் அதிமுகவினர் வாகனங்களுக்கு தீ வைத்தனர். அதில், கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்து தீக்கிரையானது. இதில் 44 மாணவிகள், 2 பேராசிரியைகள் இருந்தனர். பேருந்தில் தீ பரவி யதில், 3 மாணவிகள் சிக்கிக் கொண்டனர். கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகளும் தீயில் கருகி இறந்தனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த விசாரணை யின் இறுதியில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக கடந்த 2016-ம் ஆண்டு குறைத்தது. இவர் கள் மூவரும் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஆளுநர் ஆலோசனை

இந்நிலையில், எம்ஜிஆர் நூற் றாண்டை முன்னிட்டு, தமிழக சிறைகளில் நீண்ட நாட்களாக உள்ள 1,800 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆளுநர் உத்தரவு தேவை என்ப தால், கைதிகளின் விவரங்கள், அவர்கள் தொடர்பான கோப்பு களை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பியது. இதில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறை யில் உள்ள 3 பேரின் விவரங்களும் அடங்கி இருந்தது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பேருந்து எரிப்பு சம்பவம் தொடர் பான ஆவணங்களையும் பரிசீலித் தார். இறுதியில் மூவரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று ஆளுநர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அனுப்பப்பட்ட கோப்புகளை தமிழக அரசுக்கு திருப்பியனுப்பிய ஆளுநர், இவர்கள் விடுதலையை மறு பரிசீலனை செய்யும்படி தெரிவித் துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x