Published : 21 Oct 2018 08:53 AM
Last Updated : 21 Oct 2018 08:53 AM

கேரள அரசின் செயல் சனாதன தர்மத்துக்கு விடப்பட்ட சவால்: சபரிமலை விவகாரம் குறித்து திருவிதாங்கூர் ராணி கருத்து

``சபரிமலை கோயிலின் ஆச்சாரங் களை மீற கேரள அரசு முயற்சிப்பது, சனாதன தர்மத்துக்கு விடப்பட்ட சவால்” என திருவிதாங்கூர் ராணி கவுரி லட்சுமிபாய் தம்புராட்டி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயில் தாமிரபரணி ஆற்று படித்துறையில் நடைபெறும் மகா புஷ்கர விழாவில் நேற்று அவர் பங்கேற்றார். பின் னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருவது வேதனை அளிக்கிறது. இது, சனாதன தர்மத்துக்கு விடப்பட்ட சவால். சபரிமலையின் ஆச்சார, அனுஷ்டானங்களை மீற முயற்சிப் பதால் பக்தர்கள் மனவேதனையில் உள்ளனர். இதன் காரணமாகவே சபரிமலை தந்திரிகள் கோயிலை பூட்டி, சாவியை தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளனர். இப்பிரச் சினைக்காக பக்தர்கள் நடத்திய தொடர் போராட்டத்தால் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது என்றார் அவர்.

சரத்குமார் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் முறப்ப நாட்டில் நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில், சமக தலை வர் சரத்குமார் நேற்று பங்கேற் றார். அவர் கூறும்போது, ‘‘சபரி மலை விவகாரத்தில் உச்ச நீதிமன் றம் அளித்துள்ள தீர்ப்பு, ஆகம விதி களின்படி உருவாக்கப்பட்டுள்ள தலங்களில் கடைபிடிக்கப்படும் பாரம்பரியத்தையும், நம்பிக்கை யையும் உடைப்பதுபோல் உள்ளது. எனவே, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x