

இலங்ககை அரசு இணையதளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் ராஜபக்சே உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒரு பதிவு வெளியாகியிருந்து. அதில் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதை தரக்குறைவாக விமர்சித்து கட்டுரை ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் ராஜபக்சே வின் உருவ பொம்மையை எரித்து அக்கட்சித் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் அதிமுகவினரும், பிற அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை அரசு குறிப்பிட்ட அந்த பதிவை இணையத்தில் இருந்து நீக்கியது என்பது கவனிக்கத்தக்கது.