Last Updated : 25 Oct, 2018 10:30 AM

 

Published : 25 Oct 2018 10:30 AM
Last Updated : 25 Oct 2018 10:30 AM

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை: வைகுண்ட ராஜன் வீட்டிலும் ரெய்டு

பிரபல தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான வி.வி.மினரல்சுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை யை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ். இவரது சகோதரரின் நிறுவனம் பிஎம்சி. நெல்லை மாவட்டம் குட்டம் உள்ளிட்ட இடங்களில் ஆலை அமைத்து, கடற்கரையிலுள்ள மணலை அள்ளி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது பிஎம்சி நிறுவனம். இதனால் கடலோர பகுதியிலுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு புற்றுநோய் பரவுவது, நிலத்தடி நீர் உவர்ப்பாய் மாறி குடிக்க நீரில்லாமல் போனது என பல புகார்களை முன் வைத்து மக்கள் குமுறினர். இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மணல் அள்ள தடை விதித்தார்.

இதேபோல, விவி நிறுவனமும் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. ஆனால் விவி நிறுவனம் டிவி சேனல் செய்தி ஊடகத் துறை உட்பட வேறு பல தொழில்களிலும் இறங்கியுள்ளது. இந்த நிலையில்தான், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை, சென்னையில், எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல இடங்கள், நெல்லை, தூத்துக்குடி உட்பட பல பகுதிகளில் உள்ள வி.வி. மினரல்ஸ்சுக்கு சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாதது, கணக்கில் காட்டாத அளவுக்கு வருமானத்தை குவித்தது உள்ளிட்டவை காரணமாக வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x