Published : 20 Oct 2018 09:50 AM
Last Updated : 20 Oct 2018 09:50 AM

போரூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை புதரில் வீசிய தாய் கைது: காரணம் குறித்து போலீஸார் விளக்கம் 

போரூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை சாலை யோரம் வீசிச் சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

போரூர் அருகே வளசரவாக்கம் காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மரக்கடை கடை அருகே புதரில் பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை கடந்த 10-ம் தேதி கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் வளசரவாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து குழந்தையை வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியில், சுடிதாரில் வந்த பெண் ஒருவர் குழந்தையை வீசிச் சென்ற காட்சிகள் இருந்தன. இதன் அடிப் படையில் விசாரித்ததில், குழந்தையை வீசிச் சென்றது அந்த குழந்தையைப் பெற்ற அதேப் பகுதியைச் சேர்ந்த லாவண்யா (22) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: சென்னை சென்ட்ரலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த லாவண்யா திருச்சியைச் சேர்ந்தவர். தற்போது வளசரவாக்கம் அருகே உள்ள காரம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு கடந்தாண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நிச்சயம் செய்யப்பட்ட இளைஞருடன் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் கர்ப்பமானார். இதற்கிடையே அவரது தாய் திடீரென இறந்துவிட திருமணம் தடைப்பட்டது. அதேநேரத்தில் கர்ப்பத்தை கலைக்க முடியாததால், வயிற்றில் கட்டி இருப்ப தாக கூறிவந்துள்ளார். இந் நிலையில் சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னால் குழந்தையை வளர்க்க முடியாது என எண்ணியவர் புதரில் வீசிச் சென்றுள்ளார். இவ்வாறு போலீஸார் கூறினர்.

இதற்கிடையில், லாவண் யாவை கைது செய்த போலீஸார் அவர் கர்ப்பத்துக்கு காரணமான அந்த இளைஞரை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x