Published : 30 Oct 2018 10:42 AM
Last Updated : 30 Oct 2018 10:42 AM

பெட்ரோல்-டீசல் விலை இன்னும் 15 ரூபாய் குறையும்:ஹெச்.ராஜா பேச்சு

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் பெட்ரோல்-டீசல் விலை மேலும் 15 ரூபாய் குறையும் என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனால், அதன் விலையைக் குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் - டீசல் விலை 15 ரூபாய் அளவுக்கு குறையும் என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, “இன்றைக்கு அனைவரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் கடந்த 5-6 நாட்களாக லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்களிடம் ஒட்டு கேட்பதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கிறதல்லவா? அதனால், பெட்ரோல் - டீசல் விலை இன்னும் 15 ரூபாய் குறையும்” என பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x