Published : 23 Oct 2018 09:29 AM
Last Updated : 23 Oct 2018 09:29 AM

கவசம் வழங்கும் ‘சாய் சத்சரித்ரம்’ - வழிகாட்டலில் 100 ஆண்டுகள்

சீரடி சாய்பாபாவின் மகா சமாதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவசம் டிவி, இசை, நடனம் மற்றும் நாடகத்துடன் கூடிய சாய் சரிதத்தை, பக்தர்கள் கண்டு களித்து அவரது அருள் பெறும் வகையில், பிரம்மாண்ட பக்தி இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சீரடி சாய்பாபாவை சென்னை யிலேயே தரிசித்து மக்கள் மகிழலாம். சாய்பாபாவின் அற்புதங்கள், அனைத்து மதங்கள் உணர்த்தும் ஒருமைப்பாடு ஆகியவற்றை பக்தி கலந்த இசையுடன் அனுபவிக்கலாம்.

சாய்பாபாவின் பக்தர்கள் பல்வேறு ஜாதி, மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரையும் இணைக்கும் வகையில் சாய்பாபாவின் ‘சப் கா மாலிக் ஏக்’ போன்ற பொன் மொழிகள் அமைந்துள்ளன. சாவடி புறப்பாடு (பல்லக்கு) சாய்பாபாவின் பக்தர்களை பக்திக் கடலில் மூழ்கச் செய்யும்.

பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இசை அமைப்பில் நிகழும் இந்நிகழ்ச்சியில் ஹரிசரண், மாளவிகா, ஆனந்த் அரவிந்தாக்ஷன், திவாகர், ‘குழந்தை மேதை’ ஸ்பூர்த்தி ஆகியோர் பாடுகிறார்கள். திருமதி ராதிகா சுர்ஜித்தின் இயக்கத்தில் அவரது குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறும். முன்னா சவுகத் அலியின் வழிகாட்டுதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசைப் பள்ளி மாணவர்கள் சாய்பாபாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர் புகழ் பாடுவார்கள்.

பாடகர் கார்த்திக் சீரடி சாய்பாபா மீது பாடிய பாடல் வீடியோ, ‘கவசம் பக்தி’ மூலமாக வெளியிடப்படும். அனைத்து நிகழ்ச்சிகளும் ‘சாய் சத்சரித்ரம் வழிகாட்டலில் 100 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும்.

அக்டோபர் 25-ம் தேதி, காமராஜ் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள். டிக்கெட்களை ஆன்லைனில் பெற www.bookmyshow.com என்ற இணையத்தையும், உங்கள் இல்லத்திலேயே பெற 7338788776, 7550062323 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும். இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாய் ‘சாய் சன்ஸ்தான்’க்கு அனுப்பப்படும். சிறப்பு மஹா ஆரத்தியைக் கண்டு களிக்க ‘கவசம் டிவி’ உங்களை அன்போடு அழைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x