Published : 04 Oct 2018 09:29 AM
Last Updated : 04 Oct 2018 09:29 AM

கிராமி விருது பெற்ற முதல் தென்னிந்திய கலைஞர் ‘கடம் வித்வான்’ விக்கு விநாயக்ராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: மியூசிக் அகாடமி அக்.10-ல் வழங்குகிறது

பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு மியூசிக் அகாடமி யின் சிறப்பு வாழ்நாள் சாதனையா ளர் விருது அக்டோபர் 10-ம் தேதி வழங்கப்படுகிறது.

மியூசிக் அகாடமி அமைப் பானது மிகச்சிறந்த கலைஞர் களுக்கு எப்போதாவது ஒருமுறை சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில், இதுவரை நட னக் கலைஞர் கமலா லட்சுமி நாராயணன், வயலின் கலைஞர் லால்குடி ஜி.ஜெயராமன் ஆகி யோருக்கு இவ்விருது வழங்கப் பட்டுள்ளது.

தற்போது மியூசிக் அகாடமியின் சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் தேர்வு செய்யப் பட்டுள்ளார். கடந்த 1997-ம் ஆண்டு மியூசிக் அகாடமியின் சங்கீத கலா ஆச்சார்யா விருதைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 13-ம் வயதில் கடம் வாசிக் கத் தொடங்கிய விக்கு விநாயக்ராம், இன்றைய தலைமுறையில் உள்ள முன்னணி பாடகர்களுக்கு கடம் வாசித்துள்ளார். கடம் இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றவர். கிராமி விருது பெற்ற முதல் தென்னிந்தியக் கலைஞர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவருக்கு சிறப்பு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கு வதற்கான பிரத்யேக விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் அக் டோபர் 10-ம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இவ்விழாவில் பண்டிட் ஸ்ரீ ஹரிபிரசாத் சவுராசியா, சங்கீத கலாநிதி பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள் கிறார்கள். ரசிகர்களுக்காக விக்கு விநாயக்ராம் தனது முதன்மை சீடர் களுடன் ‘குரு லயா சமர்ப்பணம்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் கடம் இசைப்பது விழாவின் முக்கிய அம்சமாக அமைந்திருக்கும்.

இந்தத் தகவலை மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார்.தனது 13-ம் வயதில் கடம் வாசிக்கத் தொடங்கிய விக்கு விநாயக்ராம், இன்றைய தலைமுறையில் உள்ள முன்னணி பாடகர்களுக்கு கடம் வாசித்துள்ளார். கடம் இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x