Published : 22 Aug 2018 09:57 am

Updated : 22 Aug 2018 09:59 am

 

Published : 22 Aug 2018 09:57 AM
Last Updated : 22 Aug 2018 09:59 AM

மகனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி திருமுருகன் காந்தி தந்தை தாக்கல் செய்த மனு தள்ளுபடி

திருமுருகன் காந்தியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுரு கன் காந்தி, ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். இதன்காரணமாக கடந்த 9-ம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்த அவரை தேசத் துரோக வழக் கில் போலீஸார் கைது செய்தனர். ஆனால், அவரை தேசத் துரோக வழக்கில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடு வர் மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து திருமுருகன் காந்தியை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வேறொரு வழக்கில் கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து திருமுருகன் காந்தியை போலீஸார் சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். எனவே, அவ ருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தந்தை காந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் ஆகி யோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஆட்கொணர்வு மனு வில் இடைக்கால ஜாமீன் கோர முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம். இது தொடர்பாக மனுதாரர் கீழமை நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம்’’ என உத்தரவிட்டனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


தமிழகம்துப்பாக்கிச் சூடுஐக்கிய நாடுகள் சபைதிருமுருகன் காந்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author