Published : 10 Aug 2018 09:53 AM
Last Updated : 10 Aug 2018 09:53 AM

கலைஞரைப் பிரிந்து தவிக்கும் எனக்கு காலம்தான் மருந்து- கவிஞர் வைரமுத்து உருக்கம்

கலைஞரைப் பிரிந்து தவிக்கும் எனக்குக் காலம்தான் மருந்து எனக் கவிஞர் வைரமுத்து உருக்கமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:

கல்லூரி நாட்கள் தொடங்கி இன்று வரையிலான என் வாழ்க் கையில் பாதிக் காலத்தைக் கலைஞரோடுதான் கழித்திருக்கி றேன். காயம் தானாக ஆறுவதைப் போல அவரைப் பிரிந்து தவிக்கும் எனக்கு காலம்தான் மருந்து.

கலைஞரின் 90-வது பிறந்த நாளின்போது அவரைப் பெருமைப் படுத்திய சிறப்பு இப்போது நினைவு வருகிறது. அவரது 90-வது வயதில் எதைச் செய்தால் மகிழ்வார் என்று நினைத்துப் பார்த்தேன். 90 தங்கக் காசுகள் கொடுப்பதைவிட, 90 பழக்கூடைகள் வைப்பதைவிட, 90 பவுனில் ஒரு தங்கச் சங்கிலி அணிவிப்பதைவிட, 90 கவிஞர் களை முன் நிறுத்தினால் அந்தத் தமிழ் இதயம் குதூகலம் கொள் ளும் என்று நினைத்தேன்.

அவரிடம் சென்று, “உங்களுக்கு ஒரு விருந்து. உங்களோடு 90 கவி ஞர்கள் விருந்து அருந்த வருகிறார் கள்” என்றேன். அப்படியே என்னை வியந்து பார்த்தார். அவரே, கவிஞர்கள் வி.சி.குழந்தைசாமி, வாலி, அப்துல்ரகுமான் ஆகியோர் பெயர்களைக் கூறினார். இந்தக் கவிஞர்களின் பெயர்கள் ஏற் கெனவே என் பட்டியலில் இருந்தன. மொத்தமாக 89 கவிஞர்கள் சேர்ந் ததும், “நம் வீட்டிலேயே ஒரு கவிஞர் இருக்கிறாரே” என்று கனிமொழி பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னேன். கலைஞர் மகிழ்ந்தார்.

அந்த விழாவுக்கு கவிஞர் பெரும்படையே வந்தது எனக்கு மகிழ்ச்சி தந்தது. விழாவில் வரவேற்புரையை நான் வழங்கி விட்டு, கலைஞரை ஏற்புரை செய்ய வைத்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார். வகை வகையான உணவுகளை விரும்பிச் சுவைத்தார். அங்கே திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட நண்பர்களும் என் அழைப்பை ஏற்று வந்திருந்தனர்.

கலைஞர் கூறும் ஒரு கருத்து இங்கே என் நினைவுக்கு வருகிறது. கீரியும், பாம்பும் சண்டை போடு மாம். அதில் கீரி வெல்லும். பாம் பைக் கடித்துக் கொல்லும். சண் டைக்குப் பிறகு கீரி தன் மீது படரும் விஷப் பதிவுகளை ஆற்றிக்கொள் வதற்காக அருகம்புல் மீது படுத் துப் புரளுமாம். அப்படிச் செய்தால் விஷம் முறிந்துவிடும் என்பது கீரியின் நம்பிக்கை. அதுபோல் பொதுவாழ்க்கையில் தன் மீது விழும் விஷப் பதிவுக்கு முறிவு ஏற்பட, தமிழ் என்ற அருகம்புல் லில் புரண்டுகொள்வது கலைஞர் வழக்கம் தமிழகத்தில் இதுவரை எத்தனையோ முதல்வர்கள் இருந்த னர். ஏன், நாடு முழுவதும் பல தலைவர்கள் இலக்கியவாதிகளா கத் திகழ்ந்ததுண்டு. அவர்களில் 90 கவிஞர்களால் சூழப்பட்ட ஒரே தலைவர் இவர் மட்டும்தான். அதை நினைக்கும்போது இப்போதும் என் கண்கள் ஈரமாகின்றன.

அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே கலைஞருக்கும் இடம் வழங்கிய நீதிமன்றத்தை வணங்குகிறேன். அந்த இடம் கிட்டாமல் இருந்தால் தமிழகத்தின் சோகம் இரண்டு மடங்காகி இருக்கும்.

இதையெல்லாம் நினைத்து கொண்டே வியாழக்கிழமை (நேற்று) அதிகாலை மீண்டும் கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றேன்.

நம் தமிழர் மரபு வழிப்படி 2-ம் நாளில் புதைகுழிக்குச் செல்வது வழக்கம். மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து வையும் உடன் அழைத்துச் சென்றி ருந்தேன். அங்கே சென்று பூவும், பாலும் கொண்டு அஞ்சலி செலுத்தினேன். என் தந்தைக்கு வடுகபட்டியில் அப்படிச் செய்தேன். அதே மரபைக் கலைஞருக்கும் பின்பற்றினேன். என் தகப்பனார் என்னைப் பெற்ற தந்தை; கலைஞர் என் தமிழ்த் தந்தை!

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x