

புற்றுநோய் சிகிச்சைக்காக அறி முகப்படுத்தப்பட்ட கேன்சர் கவர் என்ற பாலிசியை குறைந்த காலத் தில் அதிக அளவில் விற்பனை செய்து எல்ஐசியின் தென்மண்டல அலுவலகம், அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து, எல்ஐசி நிறுவனத் தின் மண்டல மேலாளர் (மார்க் கெட்டிங்) ஆர்.துரைசாமி, மண்டல மேலாளர் (மருத்துவக் காப்பீடு) டி.ராஜலெட்சுமி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
எல்ஐசி நிறுவனம் ஜீவன் ஆரோக்யா, கேன்சர் கவர் என்ற இரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்து வருகிறது. இதில், புற்றுநோய் களுக்கு சிகிச்சை பெறுவதற்காக ‘கேன்சர் கவர்’ என்ற பாலிசி கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பாலிசியின் விற்பனை மிகப் பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1.31 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளடக்கிய தென் மண்டல அலுவலகம் மூலம், 39,190 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், கேன்சர் கவர் பாலிசியை விற்பனை செய்து அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2017-18ம் ஆண்டில் 23,843 மருத்துவக் காப்பீட்டு உரிமங்களுக் குத் தீர்வு காணப்பட்டு ரூ.32.31 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள் ளது.
இந்தியாவில் புற்றுநோய்க் கான சிகிச்சை செலவு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை இருக்கிறது. எனவே, எல்ஐசியின் இந்த கேன்சர் கவர் பாலிசியை எடுப்பதன் மூலம் பொருளாதாரப் பாதுகாப்பை பெற முடியும். 20 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் வரை இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம். ஆரம்பகட்ட புற்றுநோய்க்கு காப்பீட்டுத் தொகையில் 25 சதவீதம் ஒரே தவணையாக வழங்கப்படும்.
நோய் முற்றிய நிலையில் முழு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும். மேலும், கட்டப்பட வேண்டிய பிரீமியத் தொகையில் இருந்து விலக்கும் அளிக்கப்படும். அத்துடன், காப்பீட்டுத் தொகையில் 1 சதவீதம் பாதிக்கப்பட்ட நப ருக்கோ, இறந்தவரின் நியமன தாரருக்கோ ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், குடும்பத்துக்கு பொருளாதார பாது காப்பு கிடைக் கும். பாலிசி காலம் 10 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும். குறைந்தபட்ச பிரீமியத் தொகை யாக ஆண்டொன்றுக்கு ரூ.2,400 வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சந்திப்பின் போது, எல்ஐசி மண்டல மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) வி.சத்தியவதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.