

மதுரை அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா முனிச்சாலை சந்திப்பு அருகே பேசியதாவது:
தமிழகத்தில் உள்ளதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் சலுகைகள் இல்லை. அனைத்து தரப்பினரும் அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் எதை செய்தாலும் விமர்சிப்பதுதான் திமுக தலைவர் கருணாநிதியின் வேலை. அவரின் பேச்சு இந்த தேர்தலில் எடுபடாது. தூங்காமை, கல்வி, துணிவுடமை உள்ளவரால்தான் நிலத்தை ஆள முடியும் என வள்ளுவர் கூறியுள்ளார்.
இந்த தகுதியுள்ள முதல்வர் ஜெயலலிதாவால்தான் இந்த நாட்டினை வல்லரசாக்க முடியும். அவர் பிரதமராக அனைத்து தொகுதியிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அவருடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் சென்றனர்.