எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராஜனுக்கு பால சாகித்ய விருது

எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராஜனுக்கு பால சாகித்ய விருது
Updated on
1 min read

சிறுவர் இலக்கியப் படைப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழகத்தைச் சேர்ந்த இரா. நடராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ விருதுக்கு ஆர். அபிலாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

'தமிழ் விஞ்ஞான விக்கிரமாதித்ய கதைகள்' எழுதிய இரா.நடரஜானுக்கு 2014-ம் ஆண்டுக்கான பால சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'கால்கள்' நாவலை எழுதிய ஆர்.அபிலேஷ்-க்கு, 2014 சாகித்ய அகாடமி யுவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சாகித்ய அகாடமி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருதுக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழில், 'தமிழ் விஞ்ஞான விக்கிரமாதித்ய கதைகள்' எழுதிய இரா.நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கல்வி முறை மற்றும் பயிற்றுவித்தல் முறையை மையமாகக் கொண்ட 'ஆயிஷா' என்ற குறுநாவல் மூலம் எழுத்துலகில் வெகுவாக அறியப்பட்டதால், 'ஆயிஷா' நடராஜன் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

சிறுவர்களுக்கான நாவல்கள், சிறுகதை தொகுதிகள், அறிவியல் புனைக்கதைகள், மொழி பெயர்ப்பு நாவல்கள், பன்மொழி சிறுகதை தொகுதிகள், இலக்கிய ஆய்வு நூல்கள் உட்பட சுமார் 50 புத்தகங்கள வெளிவந்துள்ளன.

சாகித்ய அகாடமி யுவ விருது

சாகித்ய அகாடமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி யுவ விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 'கால்கள்' என்ற படைப்புக்காக, எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in