

‘மத்திய பாஜக அரசின் வேடம் மிக குறைந்த காலத்திலேயே கலைய தொடங்கி விட்டது’ என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியா ளர்களிடம் அவர் கூறும்போது, ‘மதச்சார்பற்ற நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்கு செல்லும்போது தன்னுடன் பூசாரி களை அழைத்து செல்கிறார். இது மதச்சார்பின்மைக்கு மிகப்பெரும் சவாலாகும்.
காங்கிரஸ் மீதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதும் குற்றம்சாட்டும் மோடி, நாடாளு மன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று பேசாதது ஏன் என்பது புரியவில்லை. பாஜக அரசின் வேடம் மிக குறைந்த காலத்திலேயே கலைய தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில், முக்கிய பெரு நகரங்களில் அடுக்குமாடி கட்டி டங்கள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
ராகுல் காரணமல்ல
மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தோல்வியை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஏற்றுக் கொள் கிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லாதது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி யின் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டும் காரணமல்ல. ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் காரணம்.
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. ரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தாய் அமை யும்.
தாமிரபரணி ஆற்றில் ரூ.369 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டம் முடங்கி இருப்பது குறித்து மக்கள் பிரதிநிதிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் நடிகர் சிவாஜி பிறந்த தின விழாவில் அவரது சிலை திறக்கப்படும்’ என்றார் அவர்.
நெல்லையில் பேட்டியளிக்கிறார்