Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

விஜயகாந்த் பிறந்த நாள்: போனில் மோடி வாழ்த்து; பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்தினர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 63–வது பிறந்த நாளை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் திங்கள்கிழமை கொண்டாடினார். காலையில் பட்டு ஆடை உடுத்தி தனது பெற்றோர் படத்துக்கு மரியாதை செலுத்தி னார். அப்போது அவரது மனைவி பிரேமலதா மகன்கள் சண்முக பாண்டி, பிரபாகரன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடி போனில் வாழ்த்து

விஜயகாந்துக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நடிகர் சத்யராஜ், ராதாரவி, எச்.வசந்தகுமார் உட்பட பலர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், குமாரவேலு, பேராயர் எஸ்றா சற்குணம், திரைப்பட இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

தேமுதிக பொருளாளர் இளங் கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று சால்வை, மாலை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதேபோல், தமிழ் நாடு முழுவதும் விஜயகாந்த் பிறந்தநாளை உற்சாகத் துடன் கொண்டா டினர். ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே, மாநிலம் முழுவதும் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.

இதற்கிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “எனது பிறந்த நாளையொட்டி என்னை நேரில் சந்தித்தும், தொலைபேசி, தொலைநகல், தொலைக்காட்சி, வாழ்த்து கடிதங்கள், மின்னஞ்சல், இ-போஸ்ட் ஆகியவற்றின் மூலமா கவும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதய மார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து களை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட தேமுதிக நிர்வாகிகள், தொண் டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x