

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டரில் கூறும்போது, “ஜெயலலிதாவை போலவே, கருணாநிதியும் தமிழக மக்களின் குரலாக இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மெரினாவில் இடம் கேட்டு திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் பி.எச்.அரவிந்த் பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் உயர் நீதிமன்ற வளாகத்த்துக்கு வந்து பொறுப்பு தலைமை நீதிபதி இல்லத்துக்கு வந்துள்ளனர்.
நீதிபதி ரமேஷ் இல்லத்துக்குள் அனுமதிக்குமாறு போலீஸாருடன் வழக்கறிஞர்கள் வாதாடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.