Published : 30 Aug 2018 09:42 am

Updated : 30 Aug 2018 09:42 am

 

Published : 30 Aug 2018 09:42 AM
Last Updated : 30 Aug 2018 09:42 AM

பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: பாத யாத்திரையாக சென்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு 

பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் திருவிழா, கொடியேற் றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்ற விழாவில் சென் னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர் கள் பாத யாத்திரையாக வந்து பக்திப்பெருக்கோடு பங்கேற்றனர்.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தைப் போல சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தலமும் புகழ்பெற்று விளங்குகிறது. இத் திருத்தலத்தின் 46-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னை மயிலாப்பூர் உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி, ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஆலய வளா கத்தில் உள்ள கொடிமரத்தில் ஏற்றி திருவிழாவை முறைப்படி தொடங்கிவைத்தார். முன்னதாக, ஆரோக்கிய மாதா கொடி தேர்ப் பவனி நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற் றப்பட்டது. அருட்பணியாளர்கள் எம்.ஏ.வின்சென்ட், ஜி.ஜெ.அந் தோணிசாமி, ராக் சின்னப்பா ஆகி யோர் பேராயருடன் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ் தவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கொடியேற்ற விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று பிற் பகலில் இருந்தே ஏராளமான கிறிஸ் தவர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கினர். பெண்கள் காவி நிற சேலையும் ஆண்கள் காவிநிற வேட்டியும் அணிந்தவாறு சாலை யோரத்தில் ஜெபமாலை ஜெபத்தை சொன்னபடி பக்திப்பெருக்கோடு வரிசை வரிசையாக நடந்து சென் றதை காண முடிந்தது. மாலையில் நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் சென்னை நகரின் பல்வேறு இடங் களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது. ஏற்கெனவே திருவிழா கொடி யேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு பெசன்ட்நகர் பகுதியில் போக்குவரத் தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இறை அழைத்தல் விழா, இளையோர் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை பெருவிழா, உழைப்பாளர் விழா, நலம்பெறும் விழா, ஆசிரியர் விழா, குடும்ப விழா, தேர்த்திருவிழா, அன்னைக்கு முடிசூட்டும் விழா என திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. திரு விழாவையொட்டி தினமும் நவநாள் ஜெபமும், சிறப்புத் திருப்பலியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா செப்டம்பர் 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் ஆடம் பர தேர்ப்பவனியும், ஆடம்பரக்கூட் டுத் திருப்பலியும் நடைபெறுகின்றன.

செப்டம்பர் 8-ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட் திரு பி.கே.பிரான்சிஸ் சேவியர் செய்துவருகிறார். திருவிழாவை முன் னிட்டு செப். 8 வரை கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x