Published : 30 Aug 2018 08:29 AM
Last Updated : 30 Aug 2018 08:29 AM

ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் 

இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் கட்டா யம் அணிய வேண்டும் என்ற அறிவிப்புக்கும், அதற்காக அபரா தம் வசூலிக்கவும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்-அப் உள் ளிட்ட சமூக ஊடகங்களில் விமர் சனங்கள் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கெனவே நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில் பின்னால் உட்கார்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல் மெட் அணியவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு நகரங்களில் போலீஸார் வாகனச் +சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். பைக் ஓட்டுபவர் மட்டும் ஹெல்மெட் அணிவதையே இன்னும் முழுமை யாக அமல்படுத்தாத நிலையில், தற்போது பின்னால் உட்கார்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல் மெட் அவசியம் என்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள், குழந்தைகளுடன் செல்பவர்களையும் போலீ ஸார் நிறுத்துவதால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால் வாகன சோதனையின் போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் வீண் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

இதற்கிடையே மதுரை நகரில் ஒட்டப்பட்ட, ‘‘தரமான ஐஎஸ்ஐ ஹெல்மெட் அணிய நாங்கள் ரெடி, தரமான சாலைகள் அமைத்து தர நீங்கள் ரெடியா? சாலைகளில் குண்டு, குழிகளை அடைக்க, மக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் தேவை’’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வைரலாக பரவுகிறது.

இதுகுறித்து தனியார் வங்கி ஊழியர் லட்சுமணன் கூறியதாவது: குழந்தைகளுடன் போகும்போது, எப்படி அனைவரும் ஹெல்மெட் அணிய முடியும். ஹெல்மெட் அணிய வலியுறுத்தும் அரசு முத லில் சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகள், மணல் குவியல் உள்ள ரோட்டில் ஹெல் மெட் அணிந்து பயணித்தாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை. தரமற்ற சாலைகளை அமைக் கும் காண்ட்ராக்டர்களின் ஒப்பந்தங் களை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

திருமோகூர் பெருங்குடியைச் சேர்ந்த ஜெ.செந்தில்வேல் முரு கன் கூறியது: சாலைகளை தரமாக அமைத்தாலே விபத்துகள் பெருமளவில் குறைந்துவிடும். இந்த உத்தரவால் பஸ் வசதியில் லாத கிராமங்களுக்கு செல்லும் நபர் களை மனிதாபிமான அடிப்படை யில் பைக்குகளில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x