விபத்தில் டி.ராஜேந்தர் உறவினர் உட்பட 4 பேர் பலி: மரக்காணம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்

விபத்தில் டி.ராஜேந்தர் உறவினர் உட்பட 4 பேர் பலி: மரக்காணம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்
Updated on
1 min read

கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடந்த சாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் டி.ராஜேந் தரின் உறவினர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்,

டி. ராஜேந்தரின் தங்கை ஷியாமளாவின் மகன் ஆதிகுரு (22). திரைப்பட உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர், மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண் டிருந்தார்.

காரில் அவருடைய உறவினர்கள் பிரியதர்ஷினி (29), ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயராகவன் (52) ஆகியோர் இருந்தனர். காரை விஜயராகவன் ஓட்டி வந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள் கிழமை அதிகாலை 4 மணி அளவில் கார் வந்து கொண் டிருந்தது. செட்டிக்குப்பம் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே சென்னையிலிருந்து புதுவை நோக்கி வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆதிகுரு, பிரியதர்ஷினி, விஜயராகவன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து வந்த காரில் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி செந்தமிழ் (37), அவருடைய மகன் சுரேஷ்குமார் (19), டிரைவர் பாக்கியராஜ் (31) ஆகியோர் இருந்தனர். அவர்களில் சுரேஷ்குமார் உயிரிழந்தார். செந்தமிழ், டிரைவர் பாக்கியராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, புதுவையை அடுத்த கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.

பொறியியல் படிப்பில் சேர இருந்தார்

விபத்தில் இறந்த புதுவை இளைஞர் சுரேஷ்குமார், பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் கல்லூ ரியில் சேருவதற்கு விண்ணப் பித்திருந்தார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புதுவை திரும்பியபோது விபத்தில் சிக்கிக் கொண்டார். இவ்விபத்து தொடர்பாக மரக் காணம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in