Published : 23 Aug 2018 09:32 AM
Last Updated : 23 Aug 2018 09:32 AM

தனியார் பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கொள்ளைக்கு உதவிய கார் ஓட்டுநர் கைது

தனியார் பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்க உதவியதாக கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம்(55). தனியார் பால் நிறுவன உரிமையாளர். வியாபாரத்தை விரிவுபடுத்த இவருக்கு ரூ.50 கோடி தேவைப் பட்டது. அதற்காக சிலரை அணுகியபோது வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி சென்னை வரவழைத்தனர். ரூ.50 கோடி கடனுக்கு ரூ.1 கோடி கமிஷன் தொகை தரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதற்கும் மோகனசுந்தரம் சம்மதம் தெரிவித்தார்.

வங்கிக்கடன்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.1 கோடி பணத்துடன் சென்னை வந்த மோகனசுந்தரம், ஆர்.ஏ. புரம் கற்பகம் நிழற்சாலை யில் உள்ள ஒரு சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினார். அப்போது, வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறிய காந்திலால், ராம்குமார் என்ற பெயரில் 2 பேர் வந்து மோகனசுந்தரத்தை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது, மோகனசுந்தரம் கழிவறை செல்லவே, ரூ.1 கோடி வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் கொடுத்தார். அந்த நபர்கள் பேசிய செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெயக்குமார் (40) என்பவர் சிக்கினார்.

சிறையில் அடைப்பு

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிம் கார்டை தனது முகவரியில் வாங்கிக் கொடுத்ததும், அவர் களை காரில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதும் தெரிய வந்தது. ஆனால் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும், எனக்கும் தொடர்பில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள் ளார். ஆனாலும் கொள்ளை யடிக்க உதவி செய்ததாகக் கூறி, போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பணம் கொள்ளையடிக்கப் பட்டதற்கும், தனக்கும் தொடர்பில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x