Published : 29 Aug 2018 09:36 AM
Last Updated : 29 Aug 2018 09:36 AM

அடுத்த 12 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார் 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை சார்பில் தயாரிக் கப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் பெருவெள்ளம், சுனாமி, புயல் போன்ற பேரிடர் களால் உயிர்பலியுடன், பெரும் கட்டமைப்புகளும் சேதமடைகின் றன. இதையடுத்து, தமிழக பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 23-ம் தேதி, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத் தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப் பட்டது. அன்றைய கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை தொலை நோக்குத் திட்டம் குறித்து வரு வாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் விளக்கினார். கூட்டத்தின் முடிவில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 - 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான பேரிடர் துயர் துடைப்புக்காக 4 இலக்கு கள், 7 பரிந்துரைகளுடன் உரு வாக்கப்பட்ட சென்டாய் கட்ட மைப்பு திட்டத்தின்படி இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்ட இலக்குகள்- 2030, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந் தத்தில் குறிப்பிடும் முன்னுரிமை மற்றும் இலக்குகள் இதில் உள் ளன. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2016, பேரிடர் அபாய தணிப்பு குறித்து ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட 10 அம்ச செயல் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், தமிழகம் பற்றிய குறிப்பு, பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடு, அதன் தணிப்புக்கான இயற் கையை ஒட்டிய முறையான அணுகுமுறைகள், நிர்வாக கட்ட மைப்பு, பேரிடர்களை எதிர்கொள் வதற்கான முறைகள், அபாயங் களைத் தடுக்க மற்றும் தணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கள் ஆகியவை முக்கிய அம்சங் களாக உள்ளன.

இவை தவிர, பேரிடர்களின் போது இழப்பீடு வழங்குதல், மறு வாழ்வு, பாதிப்புகளைச் சீரமைத் தல், பேரிடர் அபாயத் தணிப்பை அடிப்படையாகக் கொண்டு மாநிலத்தின் இதர வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுதல், அத்திட்டங்களை நெறிப்படுத்து தல், நிதி ஆதாரங்கள், தொலைநோக்குத் திட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி இத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

இத்திட்டம் அடங்கிய புத்த கத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக அணையர் கே.சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந் திர ரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், அபாயங் களைத் தடுக்க மற்றும் தணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x