Last Updated : 31 Aug, 2018 08:19 AM

 

Published : 31 Aug 2018 08:19 AM
Last Updated : 31 Aug 2018 08:19 AM

திமுகவில் மீண்டும் இணைகிறார் கருப்பசாமி பாண்டியன்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவிலும், திமுகவிலும் கோலோச்சிய அரசியல்வாதிகளில் ஒருவரான கருப்பசாமி பாண்டி யன், அரசியலில் இருந்து ஒதுங்கி யிருந்த நிலையில் திமுகவில் மீண்டும் இணைகிறார்.

இம்மாவட்டத்தில் 1977-ல் ஆலங்குளம் தொகுதி, 1980-ல் பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ.வாக அவர் வெற்றி பெற்றார். திமுகவில் இணைந்தபிறகு 2006-ல் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவில் இவர் மாவட்டச் செயலாளராக இருந்த போது, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தலை மையில் ஒரு கோஷ்டியும், இவரது தலைமையில் ஒரு கோஷ்டியுமாக செயல்பட்டுவந்தனர்.

மகனுக்கு ஆதரவாக...

கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பிறகு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களையும் கட்சி அமைப்பு ரீதியாக திமுக பிரித்து நிர்வாகிகளைப் பொறுப் பேற்க வைத்தது. பிரிக்கப் பட்ட மாவட்டங்களின் செயலாளர் களுக்கான தேர்தலில் தனது மகன் சங்கரை வெற்றிபெற வைக்கும் கருப்பசாமி பாண்டியனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த கருப்பசாமி பாண்டியன் திமுகவிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை, கருப் பசாமி பாண்டியனின் ஆதர வாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தார்.

`தாயிடம் கோபித்துக் கொண்டு செல்லும் பிள்ளையைப் போல நானும் 15 ஆண்டுகள் வனவாசம் சென்றேன். திமுகவில் எனது உழைப்பை மதிக்காமல் வஞ்சம் தீர்த்து, அவமானப்படுத்தி வெளியே அனுப்பினர்’ என்று கருப்பசாமி பாண்டியன் அப்போது தெரிவித்திருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 14-ம் தேதி திமுக விலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார். 2016 ஜூலை 26-ம் தேதி அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப் பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டபோது, கருப்பசாமி பாண்டியனுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. சசிகலா வுக்கு நீதிமன்றம் சிறை தண் டனை விதித்ததை அடுத்து, அவரை விமர்சித்து பதவியிலி ருந்து விலகுவதாக அறிவித்தார்.

பின்னர், அரசியலில் இருந்து பல மாதங்களாக ஒதுங் கியிருந்த நிலையில் மீண்டும் திமுகவில் இணையும் முயற் சியை மேற்கொண்டார். இந்நிலை யில், சென்னை அண்ணா அறிவால யத்துக்கு கருப்பசாமி பாண்டியன் இன்று அழைக்கப்பட்டிருக்கிறார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் மீண்டும் அவர் இணைத்து கொள்ளப் படுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x