Published : 20 Aug 2018 10:41 AM
Last Updated : 20 Aug 2018 10:41 AM

நடிகர் சங்கப் பொதுக்குழுவில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தாததால் சர்ச்சை: பாஜக தலைவர்கள் கண்டனம்

 நடிகர் சங்கப் பொதுக்குழுவில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 19) கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னணி நடிகர்கள், நாடக நடிகர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவை பின்வருமாறு:

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

இன்று நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென நடிகர் சங்க உறுப்பினரும் பாஜக கலை அணி செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது.

எஸ்.வி.சேகர்: இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு) மறைந்த பல கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய்க்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத் தெரியவில்லை. இது அறியாமையா .? அகந்தையா..?

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா: அநாகரீகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x