

தமிழக அரசின் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைதளம் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது.
அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைதளம் (>http://www.tndipr.gov.in) 2 மாதங்களுக்கும் மேலாக முடங்கியிருந்தது.
இந்த முடக்கம் தொடர்பாக, தி இந்து ஆன்லைனில் செய்தி வெளியிடப்பட்டது. | >தொடர்பு எல்லைக்கு அப்பால் அரசு செய்தி - மக்கள் தொடர்புத் துறை வலைதளம்? |
கடந்த 10-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அன்று முதல் அரசு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைதளம் செயல்படாததால், எவ்வித தகவல்களும் வலைதளம் மூலமாக பகிரப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக, அரசின் வலைதளத்தை மீண்டும் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி மேலிடம் உத்தரவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைதளம் மீண்டும் வழக்கம்போல் இப்போது செயல்படத் தொடங்கியது.