Published : 09 Aug 2018 09:37 AM
Last Updated : 09 Aug 2018 09:37 AM

அரசின் மறுப்பும், நீதிமன்ற உத்தரவும்!- மெரினா சர்ச்சையில் பரஸ்பரம் ஜெயித்த கட்சிகள்

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் திமுக வெற்றி பெற்ற செய்தி அறிந்ததும் தந்தையின் உடல் அருகே நின்றிருந்த மு.க.ஸ்டாலின் அடக்க முடியாமல் விசும்பிவிட்டார்.

’’இந்த விஷயத்தில் தமிழக அரசு முதலில் அனுமதி மறுத் தது காழ்ப்புணர்ச்சியின் அடிப் படையிலான, அரசியல் பண் பாடற்ற அணுகுமுறை” என கடு மையான விமர்சனங்கள் எழுந் துள்ள நிலையில், அதிமுக தரப்பு வழக்கறிஞர்களின் பார்வை வேறு விதமாக இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்று மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட காலகட்டத் தில் கட்சி பாகுபாடின்றி அரசியல் நாகரிகம் கருதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் ஆறுதல் கூறி வந்தனர். அவர் இறுதிக்கட்டத்தை எட்டியபோது அவரது உடலை எங்கே அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தது. அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து, தனது தந்தைக்கு மெரினாவில் அண்ணா நினைவகம் அருகில் இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவுக்கு மெரினாவில் நினை விடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, பாமக வழக்கறிஞர் கே.பாலு மற்றும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சார்பில் 5 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன.

அந்த வழக்குகளை காரணம் காட்டித்தான் மெரினாவில் திமுக தலைவருக்கு இடம் ஒதுக்க அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக சென்னை உயர் நீதிமன் றத்தை திமுக தரப்பு அணுகியது.

இந்நிலையில், ‘‘நாங்கள் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மெரினாவில் நினைவிடம் கட்டக் கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்தோம். எங்களது வழக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதற்கு இடையூறாக உள்ளது என அரசு தரப்பில் காரணம் கூறினால், நாங்கள் போட்ட வழக்கையே வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’’ என வழக்கறிஞர்கள் துரைசாமியும், கே.பாலுவும் அறிவித்து அப்படியே செய்தனர்.

இந்த சூழலை அதிமுக தரப்பு சரியாக பயன்படுத்திக் கொண்டது. அதேசமயம், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தரப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷின் வீட்டில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், “எங்களது தரப்பில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது என்ற வழக்கை நாங்கள் வாபஸ் பெறப் போவதில்லை. இதை டிராஃபிக் ராமசாமி சார்பில் முறையிடுவதற்காகத்தான் இங்கே வந்துள்ளேன்’’ என்றார். அப்போது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவரை அடிக்கப் பாய்ந்ததால் நீதிபதியின் வீட்டுக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து டிராஃபிக் ராமசாமிக்காக ஆஜரான வழக் கறிஞரும் பின்வாங்க, வழக்கை உயர் நீதிமன்றம் சிக்கலின்றி முடித்து வைத்தது.

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை - குறிப் பாக கருணாநிதியை எதிர்த்தே கட்சியையும் தொண்டர்களையும் வலுப்படுத்தினார்கள். அப்படி இருக்க, மருத்துவமனைக்கே போய் கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தது, அவரது மறைவைத் தொடர்ந்து ராஜாஜி ஹாலை இறுதி அஞ்சலிக்கு ஒதுக்கியது, அரசு மரியாதை உள்ளிட்ட விஷ யங்களில் திமுகவுக்கு ஆதரவாக உடனுக்குடன் அறிவிப்புகள் வெளி யிட்டது என முதல்வர் கே.பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிமுகவினர் மத்தியில் அவர் மீது ஒருவித கசப்பை உண்டாக்கியது என்பதே உண்மை. ஒருவேளை மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்கவும் அவர் உடனே ஒப்புக் கொண்டிருந்தால், அதுவே கட்சிக்குள் அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கும். இதையே காரணம் காட்டி அதிமுகவில் ஒரு கோஷ் டியினர் பிரச்சினையை கிளப்பி இருப்பார்கள்.

அதனால்தான், ‘எதுவானாலும் நீதிமன்றம் முடிவெடுத்துச் சொல் லட்டும்’ என்று முதல்வர் கே. பழனிசாமி நினைத்தார். இந்த செயல்பாடு திமுகவினருக்கு ஆரம்பத்தில் கொதிப்பை ஏற் படுத்தியிருந்தாலும் முடிவில் ’மரணத்துக்குப் பிறகும் எங்கள் தலைவர் போராடி ஜெயித்தார்’ என சொல்ல வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, உயர் நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அடங் கிய சிறப்பு அமர்வு, திமுக தலை வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டு இருப்பதால் இது தொடர்பான மேல் முறையீட்டுக்கு வாய்ப்பிருந்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் போகாமல் விட்டுவிட்டது. இதனால் ’மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தது தவறு’ என வேறு யாரும் எதிர்காலத்தில் வழக்கு போட்டு சிக்கல் ஏற்படுத்த முடியாது. அதேபோல அரசுக்கு எதிராகவும் வழக்கு தொடர முடியாது.

அந்த வகையில் முதல்வரின் இந்த செயல்பாடு திமுகவினருக்கு நிரந்தர நிம்மதியைத்தான் தந்துள்ளது. மேலும் இனிமேல் இதில் அரசியல் ரீதியிலான தலையீடும் இருக்காது. நன்றாக கவனித்தால் 2 கட்சிகளுமே இந்த விவகாரத்தில் ஜெயித்திருப்பது புரியும்” என்று புதிய கோணம் ஒன்றைச் சொல்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x