Published : 28 Aug 2018 09:32 AM
Last Updated : 28 Aug 2018 09:32 AM

கருவுறாத பெண்ணுக்கு 10 மாதம் சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள்; 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு உத்தரவு: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கருவுறாத பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் 10 மாதம் சிகிச்சை அளித்தது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுரை விரகனூர் கோழிமேட் டைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (32). இவரது மனைவி யாஸ்மின் (26). இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யாஸ்மினுக்கு, வயிற்றில் கரு உருவானதற்கான அறிகுறி தெரிந்தது. அதைத் தொடர்ந்து, தம்பதியினர் அருகில் உள்ள விராதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். அங்கு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் பதிவு எண்ணுடன் கூடிய தாய்-சேய் பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தொடர் சிகிச்சைக்காக யாஸ்மினை, மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனால் அவர் அங்கு சென்று பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொண்டார்.

அவருக்கு கடந்த ஜூலை 29-ந் தேதி குழந்தை பிறக்கும் என்று ஏற்கெனவே கர்ப்பிணி பதிவு அட்டையில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அந்த தேதியில் யாஸ்மினுக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. இதனால், நவநீதிகிருஷ்ணன் மனைவியை அழைத்து கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது டாக்டர்கள், அடுத்த வாரம் அழைத்து வருமாறு கூறி னர். இதனால் மீண்டும் அழைத்து சென்றார். அப்போதும் யாஸ்மி னுக்கு பிரசவ வலி வரவில்லை.

சந்தேகம் அடைந்த டாக்டர்கள், யாஸ்மினை பரிசோதனை செய்து பார்த்தனர். பின்னர் நவநீத கிருஷ்ணனிடம், ‘உங்களது மனைவி வயிற்றில் குழந்தை இல்லை, அது வெறும் கட்டி தான்’ என்ற தகவலைத் தெரிவித் துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நவநீதகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனுவை அளித் தார். இதுதொடர்பாக நாளிதழ் களில் செய்தி வெளியானது. அந்தச் செய்தியை அடிப்படையா கக் கொண்டு மாநில மனித உரி மைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச் சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத் துவக் கல்வி இயக்குநர் ஆகியோ ருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில், “யாஸ் மினுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக 4 வாரங்களில் விரி வான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x