Published : 18 Aug 2018 08:52 AM
Last Updated : 18 Aug 2018 08:52 AM

10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்புகிறது வைகை அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணை 10 ஆண்டுகளுக் குப் பிறகு முழு கொள்ளளவை எட்டுவதால் அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வருக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர். அதனால் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணைக்குப் பெரியாறு அணையில் இருந்தும், மூல வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாகப் பருவ மழை காலங்களில்கூட மூல வைகையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் வரவில்லை. அங்குள்ள மரங்கள் அடர்த்தி குறைந்ததால் மழைப்பொழிவு குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பெய்யும் மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. பெரியாறு அணைக்கு 22,588 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் வைகை அணைக்கு திறந்துவிட முடியாது. எனவே அதில் 2,336 கன அடி மட்டும், வைகை அணைக்கு திறந்துவிடப்படுகிறது. 23,064 கன அடி தண்ணீர் பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி வைகை அணைக்கு 4,872 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. வைகை அணை மொத்த நீர்மட்டம் 71. நேற்று பிற்பகல் நிலவரப்படி அணை நீர்மட்டம் 66.27 அடியை எட்டியுள்ளது. இதே நீர்வரத்து இருந்தால் வைகை அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும் வாய்ப்புள்ளது.

இதனால் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வைகை அணையை நேற்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் காலை 11 மணியளவில் வைகை அணையின் அபாய எச்ச ரிக்கை சங்கு ஒலிக்கச் செய்து கரையோர மக்களுக்கு முதற் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுத்தார். வைகை அணை கடந்த 2011-ம் ஆண்டு நிரம்பியது. இதன் பிறகு 66 அடியை தற்போது கடந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x