Published : 24 Aug 2018 04:14 PM
Last Updated : 24 Aug 2018 04:14 PM

1 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சி நடத்துகிறது

மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஆக.27 முதல் 31 தேதி வரை நடைபெறவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம். (SMSA) சென்னை மாவட்டத்தின் சார்பாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 18 வயது நிரம்பிய செவித்திறன் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் 27.08.2018 முதல் 31.08.2018 வரை நடைபெற உள்ளது.

இம்முகாம்களில் முட நீக்கியல் வல்லுநர், தொண்டை, காது, மூக்கு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் குழந்தைகளைப் பரிசோதனை செய்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை வழங்க பரிந்துரை செய்வார்கள்.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் குழந்தைகளின் 4 புகைப்படங்கள், மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை நகல் மற்றும் பெற்றோர்களின் வருவாய் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இச்சிறப்பு முகாம்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் இடங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு தங்களின் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சைகள் பெற்று பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், கேட்டுக்கொண்டுள்ளார்.

1.ஆகஸ்டு 27-ம்தேதி மண்டலம்-4

தண்டையார்பேட்டை சென்னை நடுநிலைப்பள்ளி,

எண். 13 புத்தா தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை-21

தொடர்புக்கு: 9788858510, 9884147647, 9176489291

2. மண்டலம்-13, அடையாறு. சென்னை தொடக்கப்பள்ளி,

29-வது குறுக்குத்தெரு, இந்திரா நகர் அடையாறு, சென்னை-20

தொடர்புக்கு: 9788858519, 9445718737, 9092890370.

3.ஆகஸ்டு 28-ம் தேதி மண்டலம்-5

ராயபுரம், சென்னை உருது பெண்கள் தொடக்கப்பள்ளி, எண் 71 அரத்தூண் சாலை, ராயபுரம், சென்னை-13

தொடர்புக்கு: 9788858511, 9789014961, 8939054856.

4. மண்டலம்-10, கோடம்பாக்கம் சென்னை தொடக்கப்பள்ளி,

4-வது பிரதான சாலை, சி.ஐ.டி நகர், நந்தனம், சென்னை-35

தொடர்புக்கு: 9788858518, 9444758150, 9789081918

5. ஆகஸ்டு-29-ம் தேதி மண்டலம்-10

கோடம்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி,

பிரகாசம் சாலை, (பனகல் பூங்கா அருகல்) தி நகர், சென்னை-17

தொடர்புக்கு: 9788858517, 9940211634, 9445322173

6. மண்டலம்-5 ராயபுரம் சென்னை நடுநிலைப்பள்ளி,

வி.கே.பிள்ளை தெரு, சூளை,சென்னை-112.

தொடர்புக்கு: 9788858512, 9840142460, 9445249168

7.ஆகஸ்டு-30-ம் தேதி மண்டலம்-6, திரு.வி.க.நகர் சென்னை தொடக்கப்பள்ளி, டி.வி.கே.நகர் பெரம்பூர், சென்னை-11

(திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே)

தொடர்புக்கு: 9788858513, 9043856276, 9790741543

8. மண்டலம்-9 தேனாம்பேட்டை, சென்னை சமுதாயக் கல்லூரி

எண்.24, அருணாச்சலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-05.

தொடர்புக்கு: 9788858515, 9788877955, 8939254871.

9.ஆகஸ்டு-31-ம் தேதி மண்டலம்-9

தேனாம்பேட்டை சென்னை நடுநிலைப்பள்ளி, ராம தெரு, வள்ளுவர் கோட்டம் (சுதந்திர பூங்கா அருகில்) நுங்கம்பாக்கம், சென்னை-34.

தொடர்புக்கு: 9788858516, 9444049403, 9176383727.

10. மண்டலம்-8, அண்ணாநகர், சென்னை நடுநிலைப்பள்ளி

மெக்னிக்கல்ஸ் சாலை, சேத்துபட்டு, சென்னை-31. (சேத்துப்பட்டு பாலம் அருகில்)

தொடர்புக்கு: 9788858514, 7401331608, 8925067494

மேற்கண்ட தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x