Published : 22 Aug 2014 09:30 AM
Last Updated : 22 Aug 2014 09:30 AM

ஹேப்பி பர்த் டே சென்னை..! - 375-வது பிறந்த நாளை கொண்டாடும் தீம் பாடல்கள் வெளியீடு

ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை மாநகரம் தனது 375-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வழக்கமாக, சென்னையின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், அதன் வரலாற்றை பறைசாற்றும் வகையில் புகைப்பட கண்காட்சி, ஓவியப் போட்டிகள், நடைப் பயணம் உள்ளிட்டவை வெவ் வேறு இடங்களில் நடத்தப்படும்.

ஆனால், இந்த வருடம் சென்னையின் 375-வது பிறந்த நாளை கொண்டாட சென்னை வாசிகளின் உணர்வுகளை, சென்னையின் அன்றாட வாழ்வியல் அழகை பிரதிபலிக்கும் விதமாக சென்னை தீம் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அனிருத் ரவிச்சந்தர்-ன் ‘நம்ம சென்னை சான்ஸ் ஏ இல்ல’, ஏ.ஆர். ரஹைனாவின் ‘நம்ம சென்னை’, விஷால் சந்திரசேகரின் ‘தி சாங் ஆப் மெட்ராஸ்’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

சென்னை நகரத்தின் என் றென்றும் மாறாத அடையாள மான மெரினா கடற்கரை, தலைமுறைகளை தாண்டி தலை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் ஸ்பென்சர் கட்டிடம் முதல் சமீபத்தில் இளைஞர்களின் பொழுதுபோக்கு இடங்களாக உருவெடுத்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் உள்ளிட்ட ஷாப்பிங் மால்கள் வரை, சென்னையின் ரோட்டோர கையேந்தி பவன்கள் முதல் சரவண பவன் வரை, டீக்கடை முதல் காபி டே வரை, சென்னை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இந்த பாடல்களில் படம் பிடித்து காட்ட முயற்சித்து இருக்கின்றனர்.

முருகப்பா குழு மற்றும் ‘தி இந்து’ இணைந்து வெளியிட்டுள்ள ‘தி சாங் ஆப் மெட்ராஸ்’ பாடலில் சென்னையில் முதல் முதலாக காலடி எடுத்து வைக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த நகரத்தில் கிடைக்கும் அனுபவங்கள் வாயிலாக சென்னையின் அழகை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் பிரபாகரன்.

கடற்கரையில் விற்கப்படும் சோளமும், சாலையோரத்தில் இளைப்பாற கிடைக்கும் இளநீரும், போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளும், மயிலாப்பூர் காபியும், வரலாற்று கதை சொல்லும் மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் அந்தப் பெண்ணின் ஒரு நாள் அனுபவத்தில் இடம் பெறுகின்றன.

இந்த பாடலை விஜய் பிரபாகரன் இயக்கி, விஷால் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார். இது குறித்து இயக்குநர் விஜய் பிரபாகரன் கூறும்போது, “சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், இந்த பாடலுக்காக படம் பிடிக்கும்போது பல விஷயங்களை புதிய பார்வையில் பார்க்க முடிந்தது. இது மிகவும் புது அனுபவமாக இருந்தது” என்றார்.

அதே போல் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பாடி யிருக்கும் ‘நம்ம சென்னை சான்ஸ் ஏ இல்ல’ என்ற பாடலில் கோயம் பேடு பேருந்து நிலையத்தின் கூட்ட நெரிசல், ரங்கநாதன் தெருவில் குவிந்து கிடக்கும் கடைகள், பாடிகாட் முனீஸ்வரர் கோயில், மின்சார ரயில் பயணம் என சென்னையின் கலாச்சார அடை யாளங்களாக இருக்கும் இடங் களில் படமாக்கப்பட்டுள்ளது. ‘சான்ஸ் ஏ இல்ல’ என்று சென்னை பாஷையில் பாடல் முழுக்க கொண்டாடப்படுகிறது.

இந்த வரிசையில், இசையமைப் பாளர் ஏ.ஆர்.ரஹைனாவின் இசையில் வெளி வந்திருக்கும் ‘நம்ம சென்னை’ பாடலை அஸ்வின் சக்திவேல் இயக்கியுள் ளார். இதனை சத்யபாமா பல் கலைக்கழகம் மற்றும் ரெயின் ட்ராப்ஸ் இணைந்து தயாரித் துள்ளன. காலையில் பேப்பர் போடும் பையன், மெரினாவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சென்னைக்கு புதிதாக வரும் எவரையும் வரவேற்கும் சென்னையின் ஆட்டோக்காரர்கள் என அனைவரும் சென்னையை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று இந்தப் பாடல் அழகாக கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x