Published : 20 Aug 2018 08:12 AM
Last Updated : 20 Aug 2018 08:12 AM

வாஜ்பாயின் அஸ்தி நாளை சென்னை வருகை 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் 6 இடங்களில் அவரது அஸ்தி கரைக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். 17-ம் தேதி டெல்லியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள நதிகள், கடல்களில் கலக்க பாஜகவினரும், அவரது குடும்பத்தினரும் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, வாஜ்பாயின் அஸ்தி நாளை (ஆகஸ்ட் 21) விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது.

நாளை சென்னை கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தி தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை அடையாறு கடலில் கலக்கும் இடம், கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடம், ராமேஸ்வரம், மதுரை வைகை, ரங்கம் காவிரி, ஈரோடு பவானி என 6 இடங்களில் கரைக்கப்படுகிறது.

டெல்லியில் இருந்து வாஜ்பாய் அஸ்தியை சென்னை கொண்டு வருவதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x