Last Updated : 11 Aug, 2018 09:56 AM

 

Published : 11 Aug 2018 09:56 AM
Last Updated : 11 Aug 2018 09:56 AM

வித்யாலட்சுமி இணையதளம் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வித்யாலட்சுமி இணையதளம் மூலம் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 6 மடங்காக அதிகரித்துள்ளது.

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன. குறிப்பாக பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற தொழில் சார்ந்த படிப்புகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும் கல்விக் கடன் பெற்றவர்கள் வேலை கிடைத்த பின்னரும் கடனைச் சரியாக திருப்பி செலுத்துவது இல்லை என வங்கிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதன்காரணமாக ஏழை மாணவர் கள் கல்விக் கடன் கேட்டு வங்கி கிளைகளுக்கு செல்லும்போது அலைக்கழிக்கப்படுகின்றனர்.

எனவே கல்விக் கடன் பெற எளிதாக விண்ணப்பிப்பதற்காக www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் (விஎல்பி) 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15- ம் தேதி தொடங் கப்பட்டது. இதில் மொத்தம் 35 பொதுத்துறை, தனியார் வங்கி கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் எளிமை யாக விண்ணப்பிக்கலாம், விண் ணப்பித்த பின்னர் விண்ணப்பத் தின் நிலையை தெரிந்துகொள்ள லாம். இந்நிலையில், கடந்த ஆண்டு வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்ச கம் அனுப்பிய சுற்றறிக்கையில், “அனைத்து கல்வி கடன் நடவடிக் கைகளையும் கட்டாயமாக வித்யா லட்சுமி இணையதளம் மூலம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்கள் கல்வி கடன் திட்டங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இதைத்தொடர்ந்து, விஎல்பி இணையதளம் மூலம் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 6 மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமி டெட் (என்எஸ்டிஎல்) தகவல்படி கடந்த 2016-17-ம் ஆண்டில் நாடு முழுவதும் 11,854 பேர் மட்டுமே விஎல்பி இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலை யில், 2017-18-ம் ஆண்டில் 63,242 பேரும், 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 29-ம் தேதி வரையிலான 4 மாதங்களில் மட்டும் 68,302 பேரும் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 1,44,390 விண்ணப்பங்கள் இந்த இணைய தளம் மூலம் பெறப்பட்டுள்ளன. அதில், 42,733 பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 26,392 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட் டுள்ளன.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக 22,119 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. விண்ணப் பங்கள் நிலுவையில் இருக்க மாணவர்கள் தரப்பில் உரிய தக வல்களை அளிக்கவில்லை என்ற காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செயல்பட்டு வரும் ‘எஜூகேஷன் லோன் டாஸ்க் ஃபோர்ஸ்’ (இஎல்டிஎஃப்) அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் கூறும்போது, “நம் நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் கல்விக் கடனுக் காக ஆன்லைன் மூலம் விண்ணப் பித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆன்லைன் மூலம் கல்விக்கடன் பெறுவது குறித்து கிராமப்புற மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். எனவே, வங்கிகள் விஎல்பி இணையதளம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களின் கல்விக் கடன் விண்ணப்பங்கள் மீது 15 முதல் 30 நாட்களில் வங்கிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பல வங்கிகளில் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஏழை மாணவர்கள் உரிய ஆவ ணங்களை அளிக்கவில்லை என்றா லும், அவர்களுக்கு வழிகாட்டுதல் களை வழங்கி கடன் வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x