

மறைந்த திமுக தலைவர் கருணா நிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய நேற்று காலை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பிறகு, பொதுப்பணித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பெ.அமுதா, சர்க்கரைத் துறை இயக்குநர் அனு ஜார்ஜ் ஆகியோர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை அளவிடும் செய்யும் பணியை மேற்கொண்டனர்.
அதன்பிறகு தமிழக அரசின் சார்பில் விஐபிக்கள் வருகைக்கான முன்னேற்பாடுகள், நல்லடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகள், ராணுவ மரியாதை செய்வதற்கான அடிப்படை பணிகள் ஆகியவற்றை ஐஏஎஸ் அதிகாரி அமுதா முழுமையாக ஒருங்கிணைத்தார். மேலும், மாலையில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியபோதும் வரிசையாக என்னென்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்வுகளை மு.க.ஸ்டாலின், அவரது குடும்ப உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தார்.