Published : 20 Aug 2018 08:15 AM
Last Updated : 20 Aug 2018 08:15 AM

மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்:வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் அறிவிப்பு

ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப் பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பருவமழை காலங்களில் மழைநீர் வீணாவதைத் தடுக்கும் வகையில், ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதிக அளவு பாதிக்கப்பட்ட பவானி பகுதியை முதல்வர் பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த முதல்வர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி, பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,335 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 832 பேர், 67 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளும், குழந்தைகளுக்குத் தேவையான பால், ரொட்டி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

ஈரோட்டில் வெள்ளப்பெருக்கி னால் 1976 வீடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. இதில், 114 வீடுகள் பாதி அளவும், 263 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 1,599 வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் 609 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. 47 கிராமங்களைச் சேர்ந்த 806 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள் ளனர்.

பவானிசாகர் அணைக்கு தற் போது விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.95 லட்சம் கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, கரையோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில், குடியமர்த்தும் வகையில் அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்படும். வெள்ள நீர் முழுமையாக வடிந்தவுடன் பயிர்ச்சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.

குடிமராமத்துப் பணிகளை பொறுத்தவரைக்கும் ஏற்கெனவே 1,519 ஏரிகள் ரூ.100 கோடி செலவில் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள 1,511 ஏரிகளை, ரூ.328 கோடி செலவில் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை மேற்பார்வையிட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆறானது சமவெளிப் பகுதிகளில் செல்வதால், தடுப் பணைகள் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பருவ மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையாக சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப் பட உள்ளன. இதற்காக ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப் பட்டும். அந்தக் குழு தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்த விவரத்தை ஓரிரு மாதங்களில் அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக் கும். அதன் பிறகு தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீர் சேகரிக்கப்படும்.

மழைநீரை முழுமையாக சேமிக்கும் வகையில், 3 ஆண்டு களில் ரூ.1,000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப் படும். இதில் முதல் கட்டமாக ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் விரைவில் கட்டப்பட உள்ளன என்றார்.

தொடர்ந்து ஈரோடு காளிங்க ராயன் விடுதியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர்பங்கேற்றார்.

பள்ளிபாளையம், குமாரபாளை யம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு அதிகப்படியாக 25,500 கனஅடி தண்ணீர்தான் கொடுக்க முடியும். அதற்குமேல் வாய்க்கால் கொள்ளளவு பிடிக் காது. அங்கே வறட்சியாக இருக்கும் காரணத்தினால் 25,500 கனஅடி தண்ணீரும் விவசாயிகள் நாற்று நடுவதற்காக திறக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண் ணீர் கிடைக்கும். இதை ஆய்வு செய்வதற்காக 9 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். காவிரி, திருமணி முத்தாறு ஆறுகளை இணைப்ப தற்கு முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போதே முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. அப்பணி அரசின் ஆய்வில் உள்ளது. உள்ளூர் ஆறுகளை இணைப்பதற்காகத்தான் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் கள், கண்காணிப்புப் பொறியாளர் களைக் கொண்ட ஒரு குழு 3 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு விட்டன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x