Published : 13 Aug 2018 07:27 AM
Last Updated : 13 Aug 2018 07:27 AM

கருணாநிதி நினைவிடத்தில் தொடர் அஞ்சலி: 4-வது நாளாக குவிந்த தொண்டர்கள், பொதுமக்கள்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க.முத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். 4-வது நாளான நேற்று பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண தொண்டர் கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த 7-ம் தேதி சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கடந்த 8-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உருவப்படத்தின் முன்பு பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் பல்வேறு மலர்களைக் கொண்டு திமுகவின் சின்னமாக உதயசூரியன், கருப்பு, சிவப்பு வண்ணங்கள் கொண்ட திமுக கொடி போன்ற தோற்றங்களால் நேற்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வி, தொழில் நிறுவனங் களுக்கு விடுமுறை தினம் என்ப தால் நேற்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட் டது. அஞ்சலி செலுத்த வந்தவர் கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களை ஒழுங்குபடுத்த நினைவிடத்தில் போதிய போலீஸார் நியமிக்கப்பட வில்லை. இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கட்சியினரே கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்றதால் பொதுமக்களுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

இந்நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் அவருடைய மூத்த மகன் மு.க.முத்து அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று வந்தார். உடல்நலம் குன்றியிருந்ததால் சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, திமுக மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி தலைமையில் டிசம்பர்-3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத் தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆசிரியர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத் தினர். கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு, மகள் செல்வி, மருமகள் துர்கா ஸ்டாலின் ஆகியோரும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

சமக சார்பில் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கவிஞர் பா.விஜய், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பழம்பெரும் நடிகை லதா, நடிகர் தியாகு, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x