தனியார் காவலர்கள் சீருடை அணிவதில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எச்சரிக்கை

தனியார் காவலர்கள் சீருடை அணிவதில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எச்சரிக்கை
Updated on
1 min read

தனியார் காவல் பணியில் ஈடுபடு வோரின் சீருடை, தமிழ்நாடு அரசு காவல்துறையினரின் சீருடை போல இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி அணிந்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் இந்திய கம்யூ னிஸ்டு கட்சி உறுப்பினர் குண சேகரன் பேசினார். அவர் பேசும் போது கூலிப்படை செயல்பாடுகள் உள்ளிட்ட சில கருத்துகளை தெரி வித்தார். அப்போது முதல்வர் ஜெய லலிதா குறுக்கிட்டு பேசியதாவது:

காவல்துறையின் நடவடிக் கைகளால் கூலிப்படையின் செயல் பாடுகள் குறைந்துள்ளன. தனியார் காவல் பணியில் ஈடுபடுவோரின் சீருடை, தமிழ்நாடு அரசு காவல் துறையின் சீருடை போல இருப்ப தாகவும், இதனால் காவல் துறையின் சீருடையை மாற்ற வேண்டும் என்று உறுப்பினர் கோரி யுள்ளார். தமிழ்நாடு அரசு காவல் துறையின் சீருடை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருப்ப தால், அதை மாற்றத் தேவை யில்லை. தனியார் காவல் பணியில் ஈடுபடுவோரின் சீருடை, தமிழ்நாடு அரசு காவல்துறையினரின் சீருடை போல இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி அத்தகைய சீருடை அணிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் யார் தவறு செய்தாலும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in