Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

உஸ்மான் சாலை மேம்பால திட்டத்துக்கு மண் பரிசோதனை நிறைவு

தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்தையும், மகாலிங்க புரம் மேம்பாலத்தையும் இணைக்கும் திட்டத்துக்கு மண் பரிசோதனை முடிந்துவிட்டது. அது தொடர்பான அறிக்கை மாநகராட்சியிடம் சமர்ப் பிக்கப்பட்ட பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக் கப்படும்.

தி.நகர் பகுதியில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்கு, உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலத்தையும் நுங்கம்பாக்கத்திலிருந்து தி.நகர் நோக்கி வரும் மகாலிங்கபுரம் மேம்பாலத்தையும் இணைக்க மாநகராட்சி திட்ட மிட்டது. உஸ்மான் சாலை மேம்பாலமும் மகாலிங்கபுரம் மேம்பாலமும் தலா 600 மீட்டர் நீளம் கொண்டவையாக உள்ளன. இவற்றுக்கு இடையிலான தூரம் சுமார் ஒரு கி.மீ. இருக்கும். இதில் உஸ்மான் சாலை மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை தகர்த்து அந்த மேம்பாலம் மகாலிங்கபுரம் மேம் பாலம் வரை நீடிக்கப்படும். மகாலிங்கபுரம் மேம்பாலத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “இத்திட்டத் தால் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வசதி ஏற்படும்.

சாலைகளில் வாகனப் போக்குவரத்தை குறைத்து, தி.நகரை பாதசாரிகளுக்கான இடமாக மாற்றுவதுதான், நீண்ட நாள் திட்டம். வாகனப் போக்குவரத்தில் ஏதேனும் மாற்றம் உண்டா என்பது போக்குவரத்து காவல்துறையினரிடம் கலந்தா லோசித்த பிறகு தெரியவரும்” என்றார்.

ஆனால், தி.நகர் குடியிருப் போர் நலச்சங்கத்தினர் இத்திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து நலச்சங்கத்தின் தலைவர் பஷீர் கூறும்போது, “ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை.

இந்நிலையில் 2 மேம்பாலங் களை இணைப்பதால் போக்கு வரத்தை குறைக்க முடியும் என்று மாநகராட்சி எப்படி கூறுகிறது? மேலும் இந்த பணிகள் நடைபெறும் வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகத்தான் ஆகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x