Published : 08 Aug 2018 03:34 PM
Last Updated : 08 Aug 2018 03:34 PM

மாநில முதல்வர்கள் ஆக 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி

மத்திய அரசிடமே அதிகாரம் குவிந்து விடக்கூடாது, மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திமுக தலைவர் கருணாநிதி, மாநில முதல்வர்கள் ஆகஸ்ட்1 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்

கடந்த 1974-ம் ஆண்டு, முதல்வராக இருந்த கருணாநிதி, ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டையில் தேசியக்கொடியே ஏற்றிய முதல் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்

மாநிலத்துக்குச் சுயாட்சி, திராவிட நாடு, தனிக்கொடி என்று திமுக தலைவர் கருணாநிதி அரசியல் போராட்டத்தை தொடங்கியதன் விளைவால் தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றும் உரிமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மாநிலங்களுக்கு வழங்கினார்.

அதற்கு முன் கடந்த 1973-ம் ஆண்டு வரை ஆகஸ்ட் 15-ம் தேதியும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதியும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் கோட்டையில் கொடிஏற்றி வந்தனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக நின்றிருக்க, மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவது ஜனநாயகமாக எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி உரிமையை மீட்டவர் கருணாநிதி.

கடந்த 1973-ம் ஆண்டு பிப்ரவர் மாதம் திமுக தலைவர் கருணாநிதி , மாநிலங்களில் முதல்வர்கள் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று புறக்கணிக்கப் படுகின்றனர் என்று புகார் அளித்தார். மாநிலத்துக்குச் சுயாட்சி வேண்டும், மாநிலங்களுக்கு தனிக்கொடி வேண்டும் முழுக்கமிட்டார்.

அது மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய அப்போதே, ராஜமன்னார் தலைமையிலான குழுவை கடந்த 1969-71ம் ஆண்டு அமைத்தார். இந்தக் குழுவில் ஏ.லட்சுமண முதலியார், சந்திரா ரெட்டி உள்ளி்ட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக்குழு 1971-ம் ஆண்டு மே 27-ம்தேதி 383 பக்க அறிக்கையை அளித்து.

அதில் மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை, மாநில அரசுகளை அதிகமாக்கி, பரவலாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. நாட்டிலேயே முதல்முறையாக அப்போது இதுபோன்ற குழுவை நியமித்தது கருணாநிதி ஒருவர் மட்டுமே.

அதுமட்டுமல்லாமல், முரசொலி நாளேட்டின் விழாவில், பேசிய அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன், மாநில சுயாட்சி குறித்துப் பேசினார். சுதந்திரத்தினத்தன்று ஏன் மாநில முதல்வர்களுக்குத் தேசியக்கொடி ஏற்றும் உரிமை வழங்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி வியப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின் திமுக கருணாநிதி விடுத்த கோரிக்கை உள்ளிட்டவற்றால், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு அறிக்கையைவெளியிட்டார். அதில் சுதந்திரத்தின்று தேசியக்கொடியை முதல்வர்கள் ஏற்றலாம் என்று அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 1974-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் கருணாநிதி. புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக கொடியேஏற்றிய முதல்வர் எனும் பெருமையை கருணாநாதி பெற்றார்.

அதன்பின் நடந்த ஊடகங்கள் சந்திப்பில் பேசிய கருணாநிதி, மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் குறித்தும், அனைத்து மாநிலங்களுக்கும் அதன் அவசியம் குறித்தும் விவரித்தார். இது எங்களுக்குக் கட்சிக்காக மட்டும் செய்யவில்லை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் ஆதரவாகப் போராடியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x