

கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியானது.
அதில், ''கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
காவேரி மருத்துவமனை முன்பு அதிகஅளவில் திமுக தொண்டர்கள் கூடியபடி உள்ளனர். பலர் கதறி அழுந்தும், எழுந்து வா தலைவா என கண்ணீர் மல்கக் கூறி வருகின்றனர்.
இதுபோலவே, மருத்துவ அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கண்ணீர் மல்க கதறி அழுது வருகின்றனர். இதனால், அங்கும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.