

இந்த தேசம் தனது மிகச்சிறந்த மகன்களில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதியை இழந்துவிட்டது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்தியா தனது மிகச்சிறந்த மகன்களில் ஒருவரான திமுக தலைவர் மு. கருணாநிதியை இழந்துவிட்டது. தமிழகம் தனது தந்தையை இழந்துவிட்டது. கருணாநிதியை இழந்து தவிக்கும் அவரின் தமிழக மக்களுக்கும், மு.க.ஸ்டாலின், கனிமொழி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன். கருணாநிதியின் இழப்பை எண்ணி இந்தியாவை இரங்கல் தெரிவிக்கிறது'' என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.