

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் காலை முதலே கடுமையான போக்குவர்த்து நெரிசலால் சென்னை வாசிகள் சிரமப்பட்டனர்.
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் வியாழக்கிழமை பெய்த ஒரு நாள் மழைக்கே வெள்ளம் போல் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் அலுவலகம் செல்வோரும், பள்ளிக் கூடம் செல்லும் குழந்தைகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அவற்றின் புகைப்படத் தொகுப்பு...